Home Latest News ஒருவழியாக இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மெட்ராஸ் ஒழிந்து சென்னை உயர் நீதி மன்றம் ஆனது ??!!

ஒருவழியாக இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மெட்ராஸ் ஒழிந்து சென்னை உயர் நீதி மன்றம் ஆனது ??!!

ஒருவழியாக இருபது ஆண்டுகளுக்குப் பிறகு  மெட்ராஸ் ஒழிந்து  சென்னை உயர் நீதி மன்றம் ஆனது ??!!

மாறுதல்களை ஏற்றுகொள்வதில் சட்டத் துறை எத்தனை மெத்தனமாக இருக்கிறது என்பதற்கு மெட்ராஸ் ஹை கோர்ட் என்ற பெயரை சென்னை ஹை கோர்ட் என்று மாற்ற மத்திய அரசுக்கு இருபது ஆண்டுகள் தேவைப் பட்டிருக்கிறது என்பது ஒரு உதாரணம்.

1995  லேயே மெட்ராஸ் சென்னை ஆகி விட்டது.    அதன் தொடர்ச்சியாக எல்லா மெட்ராஸ் பெயர்களும் சென்னை என்று ஆக வேண்டியது தானே.

அதற்கென தனியாக சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் இருந்தாலும் உடனடியாக அமுல் படுத்த தேவையான நடவடிக்கை களை எடுக்க முடியாமல் போனதற்கு என்ன காரணம்.?

மெட்ராஸ் என்ற பெயர் நீடிக்க வேண்டும் என்று கேட்கும் நான்கு பேர் இருக்கத்தான் செய்வார்கள்?

சென்னை உயர் நீதி மன்றத்தின் மதுரை கிளை அமைக்க எத்தனை பேர் ஆட்சேபித்தார்கள்?    எத்தனை முறை உச்ச நீதி மன்றத்தின் கதவைத் தட்டியிருப்பார்கள் ?

இந்த முட்டுக்கட்டைகளை எல்லாம் அகற்றிய பிறகே மாற்றங்களை கொண்டு வர வேண்டி யிருக்கிறது.

தாமதமாக இருந்தாலும் இப்போதாகிலும் செயல்பட்ட மத்திய அரசை பாராட்டலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here