Latest News

கொலம்பியாவில் அமைதி கொண்டு வந்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இலங்கையில் தோற்றது ஏன்?

Share

ஆர்ட் ஆப் லிவிங் என்ற அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்.

இந்திய பிராமணர்.    உலகமெங்கும் ஆசிரமங்களை நிர்வகிப்பவர்.   உலக நாடுகளில் அவர் ஆன்மிகத்தை அறிமுகப் படுத்தும் முறை வேறு.     அங்கெல்லாம் தத்துவங்களாக மட்டுமே உபதேசம் இருக்கும்.

இந்திய ஆன்மிக குருமார்கள் யாரும் இங்கே பாமர இந்து கட்டி மாரடித்துக் கொண்டிருக்கும் புராண இதிகாச குப்பைக் கதைகளை உலக நாடுகளில் விநியோகிப்பதில்லை.

அந்தக்  கதைகளை அப்படியே ஆன்மிக கருத்து தத்துவ உவமைகளாக எடுத்து உதிர்ப்பார்கள்.

தர்மம் என்றும் வெல்லும் அல்லவா.   இவர்களும் ஜெயித்து கொண்டிருகிறார்கள்.

கொலம்பியாவில் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இடது சாரி  பார்க்  FARC கொரில்லாக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் உள்நாட்டுப் போர் நடந்து வந்தது.

அவர்களை தனது கனடிய ஆசிரம தொண்டர்களை வைத்து தொடர்பு ஏற்படுத்தி கொலம்பியாவில் பல குணப்படுத்தும் மற்றும் மறுவாழ்வு மையங்களை தொடங்கி நடத்தி அந்த அரசின் விருதையும் பெறுகிறார்.

அதன் மூலம் அந்த நாட்டு போராளிகளையும் தொடர்பு கொண்டு பேசி அவர்களுக்கும் காந்திய சிந்தனைகளை அறிமுகப் படுத்தி அகிம்சை போராட்டத்துக்கு தயார்  படுத்துகிறார்.

இறுதியில் அரசிற்கும் போராளிகளுக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்தி ஒப்பந்தத்திலும் கையெழுத்திட வைக்கிறார்.

இந்த சமாதான முயற்சியில் ஈடுபட்ட அதன் அதிபர் ஜூவான் மானுவேல் சண்டோஸ் 2016 ம் ஆண்டின் சமாதானத்திற்கான நோபல் பரிசு பெறுகிறார்.

பாராட்டுவோம்   மென்மேலும் பல நாடுகளில் இதேபோல் வெற்றியை பெற வாழ்த்துவோம்.

இதே போல் ஸ்ரீலங்கா கொசோவோ, மணிப்பூர், நேபாள்,காஷ்மீர் பீகார், ஈராக் மற்றும் சிரியா போன்ற இடங்களில் நிலவும் பிரச்னைகளை தீர்க்க முயற்சி மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்தி ருக்கிறார்.

முன்பு பலமுறை இலங்கையில் முயன்று  தோல்வி அடைந்தவர் தான் இவர்.

எல்லாம் சரிதான்.ஒன்றே ஒன்று மட்டும்தான் இடிக்கிறது.இவரைப் போன்ற ஆன்மிக குருமார்கள் ஏன் பணக்காரர்களையே தேர்ந்தெடுத்து போதனை செய்கிறார்கள்.?

சிம்லாவில் ஒரு ஆன்மிக விழாவை ஏற்பாடு செய்து கோடிக்கணக்கில் செலவு செய்து வசதியான பக்தர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தியவர் இவர்தான்.  அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என்றபோது மறுத்து பின் நீதிமன்றம் உத்தரவிட்ட உடன் செலுத்தியவர்.

ஏழைகளுக்கு ஏன் இவர்களின் போதனைகள் சென்று  அடைவதில்லை.       அவர்களை ஆன்மிகப்  பாதைக்கு அழைத்து தேவையற்ற சடங்கு சம்பிரதாயங்களில் இருந்து அவர்களை விடுவிக்க ஏன் பிரச்சாரம் செய்வதில்லை. ?

அமைதிக்கு ஆன்மிக தேடல் தொடர்பு அவசியம் என்னும் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அவர்களே கொஞ்சம் இந்தியாவிலும் ஆன்மிகத்தை பரப்புங்களேன்??!!    ஏழைகளை மூட நம்பிக்கைகளில் இருந்தும்  கை தூக்கி விடுங்களேன்.??!!

This website uses cookies.