ஒட்டுக்கு விலை இப்போது இரண்டாயிரம்.
தஞ்சாவூர் , அரவாக்குறிச்சி, திருபரங்குன்றம் இடைத்தேர்தல்கள் தற்கால அரசியல் இனி எப்படி மாறும் என்பதற்கு முன்னோட்டம்.
சகட்டு மேனிக்கு ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் விநியோகித்தது அ தி மு க.
மாற்று கட்சிக்காரன் என்று பார்க்கவில்லை. கொடுக்கிறோம் முடிந்தால் போடு என்று கொடுத்து விட்டு போய்க்கொண்டே இருந்தார்கள்.
எந்த இடங்களிலும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை எதிர்த்து யாரும் குரல் எழுப்ப வில்லை.
இவர்கள் எந்த முகத்தோடு பணம் கொடுத்தவன் ஊழல் செய்தால் கண்டிக்க முடியும்?
ஜனநாயகத்துக்கு நம் மக்கள் தகுதி படைத்தவர்கள் தானா?
யார் குற்றவாளிகள்? பணம் கொடுத்தவர்களா ? வாங்கியவர்களா?
ஒரு மாதம் முன்பே பிரச்சாரம் என்ற பெயரில் வெளி மாநிலத்தவர் டேரா போடுவதை தடுக்க வேண்டும்.
ஊர் பார்க்க ஜனநாயகம் நடுரோட்டில் பட்டப் பகலில் கற்பழிக்கப் படுகிறது.
மக்கள் என்று சொல்லப் படும் நடமாடிகள் கண்டும் காணாதது போல கடந்து போய்க்கொண்டிருகிரார்கள்.. காவல்துறை உள்பட.
நல்ல ஜனஜாயகம்.
This website uses cookies.