Latest News

குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக வை மிரட்டி பணிய வைக்கும் பா ஜ க ???!!!

Share

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா ஜ க வுக்கு வெறும் 22000 வாக்குகள் மட்டுமே தேவைப் படுகிற நிலையில் அ தி மு க வசம் உள்ள  59000 வாக்குகளை மிரட்டி வாங்க நினைக்கிறது பா ஜ க .

அதனால்தான் அ தி மு க  எங்களுக்கே வாக்களிக்கும் என்று பொன் ராதாகிருஷ்ணனும் இல. கணேசனும் பேட்டி கொடுக்கிறார்கள்.     அதி மு க தரப்பில் மறுப்பதற்கு கூட ஆளில்லை.

பா ஜ க யாரிடம் வேண்டுமானாலும் ஆதரவை கோரலாம்.   அது உரிமை.    அ தி  மு க கூட அதை பரிசீலிக்கலாம்.    ஏனென்றால் ஏற்கெனெவே தி  மு  க காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதால் எங்களுக்கு வேறு வழியில்லை என்று கூறலாம்.   ஆனால் இந்தியாவின் மூன்றாவது பெரிய இடத்தில் உள்ள ஒரு கட்சியை தன் தலைமை யாரிடம் உள்ளது என்பது தொடர்பாக பிரச்னையாக இருக்கும்போது பா ஜ க முந்திக் கொண்டு அவர்கள் ஆதரவு எங்களுக்குத்தான் என்றால் அவர்கள் எங்களை மீறி எதுவும் செய்ய முடியாது என்று பா ஜ க அறிவிக்கிறது என்றுதானே பொருள்.

நமது கவலையெல்லாம் நீ யாருக்காவது ஆதரவு தந்து விட்டுப் போ.

இந்தப் போக்கு சரிதானா?     இதே நிலை நீடித்தால் அ தி மு க அரசு அறிவிக்க வேண்டிய அனைத்தையும் பா ஜ க வே அறிவிக்கும் சூழ்நிலை வராது என்பதற்கு என்ன உத்தரவாதம். ?

நடப்பது பா ஜ க வின் அடிமைகளின் ஆட்சி என்பது போல் தோற்றம் உருவாகி விட்டது.

தமிழர்களின் உரிமைகள் பறிபோகும் என்ற அச்சம் உருவாகி விட்டது.

உட்கட்சி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் அதி மு க தலைவர்களில் இது பற்றி சிந்திக்க ஒருவர் கூடவா இருக்க மாட்டார்?

நமக்கு கிடைத்த அடிமைகள் நல்லவர்கள் . வாயைத் திறந்து பேச மாட்டார்கள் என்ற கர்வத்தில் இருக்கிறது பா ஜ க .

போதாதற்கு பா ஜ க என்ன தீண்டத் தகாத கட்சியா என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேட்கிறார்.    ஆக பாதை விரிக்க தயாராகி விட்டார்கள்.

நமக்குத்தான் அச்சமாக இருக்கிறது.     இன்னும் என்னவெல்லாம் பறிபோகுமோ ?

This website uses cookies.