ராகுல் பிரிட்டிஷ் பிரஜையா? சுப்ரமணியன் சுவாமி பொய் சொல்கிறாரா???

Share

பிரிட்டனின் கம்பெனி சட்ட அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ராகுல் காந்தி தன்னை பிரிட்டிஷ் பிரஜை என்று குறி ப்பிட்டிருப்பதாக சுப்ரமணியன் சுவாமி ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் அறிவித்து அதனால் ராகுல் இந்திய அரசியல் சட்ட விதிகளை மீறி விட்டதாக குற்றம் சுமத்தினார்.

இது தொடர்பாக பிரதமருக்கு ஒரு புகார் கடிதத்தையும்
எழுதியிருக்கிறார்.

பிறந்தது முதல் ராகுல் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்திய குடிமகன் என்றும் குற்றச்சாட்டு முழுவதும் பொய் என்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரண்டீப் சுர்ஜெவாலா மறுத்திருக்கிறார். .

இருவரில் யார் சொல்வது பொய்? பிரிட்டிஷ் ஆவணங்கள் பொய்யா? பொய் என்றால் அதை பயன்படுத்தி குற்றம் சுமத்திய சுப்ரமணியன் சுவாமி மீது என்ன நடவடிக்கை. ?

உண்மை என்றால் ராகுல் தரும் விளக்கம் என்ன? விளக்கம் சரி இல்லை என்றால் அவர் மீது என்ன நடவடிக்கை.?

ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுவதும் குற்றம்! ஆதாரம் இருந்தால் விளக்கம் அளிக்காமல் தவிர்க்க அனுமதிப்பதும் குற்றம்?
இரண்டையும் கேட்டுக் கொண்டு பொதுமக்கள் விடை கிடைக்காமல் தவிப்பது ஜனநாயக கொடுமை??!!

This website uses cookies.