ராகவா லாரன்சும் முத்தையா முரளிதரனும் தலா ஒரு கோடி, டோனி 75 லட்சம் சுரேஷ் ரைனா 50 லட்சம் அல்லு அர்ஜுனும் சூர்யாவும் 25 லட்சம் , தெலுகு நட்சத்திரங்கள் பிரபாஸ் நம்ம தனுஷ் ,விஷால் ,சிவகார்த்திகேயன் விக்ரம் பிரபு சத்யராஜ் சானியா மிர்சா , என்று பலரும் 15 முதல் 2 லட்சம் வரை மழை நிவாரண நிதி கொடுத்திருக்கையில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் 10 லட்சம் கொடுத்து தனது நன்றியை வெளிப் படுத் தியிருக் கிறார். .
நம்ம ஜெயலலிதா முதல்வரா இருக்கிற நிலையில் நாம் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று அத்தனை முதலாளிகளும் சேர்ந்து வந்து முதல் நாளிலேயே 22 கோடி கொண்டு வந்து கொடுத்து அசத்தி இருக்கிறர்கள்.
ஒருவரது நன்கொடையை வைத்து மட்டுமே அவரது குணத்தை மதிப்பிட்டு விட முடியாது .
கொடுத்தவர்கள் எல்லாரும் கொடுக்காதவர்களை விட மேலானவர்கள் என்றும் பொருள் அல்ல.
ரஜினி திருமண மண்டபத்தில் பாதிக்கப் பட்டவர்களை தங்க வைத்து பராமரித்து ஐந்து கோடி பெறுமான பொருள்களை விநியோகம் செய்ததாக வரும் தகவல்கள் அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த செய்தி எல்லாம் ரஜினி மீது தமிழ் மக்கள் கொண்ட நேசத்தை தக்க வைக்கும் என்று நம்புவோமாக.