ரஜினி அரசியலுக்கு வருவாரா என்று இருபத்தி ஐந்து ஆண்டுகளாக கேள்வியை மட்டுமே எழுப்ப வைத்து கலைத்துறையில் சுப்பர் ஸ்டாராக வலம் வந்தது போதும் உண்மையிலேயே வந்து பார்த்தல் என்ன என்று சிந்திக்க த்துவங்கி விட்டார் அவர்.
அமித் ஷா சொல்றார் ரஜினி செய்றார் என்று புது வசனம் எழுத வேண்டியதுதான்.
தமிழருவி மணியன் அர்ஜுன் சம்பத் போன்ற புல்லுருவிகள் நீண்டு கொண்டே போகிறது. அதில் திருமாவும் சேர்ந்தால் கூட ஆச்சரியமில்லை.
தலித் ஆதரவாளர் என்ற உருவாக்கம் கபாலி படம் முதல் உருவாகி விட்டது.
தலித், உயர் சாதி இந்துத்துவ சக்திகளின் ஆதரவு மற்றும் சிதறிக் கிடக்கும் அதிமுக உதிரிகள் என்ற மூன்றின் கட்டமைப்பு வெற்றியைக் கொடுக்கும் என்ற திட்டம் உருவாகியிருக்கிறது .
எந்த அளவு வெற்றி கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை என்றாலும் மத்தியில் பா ஜ க ஆட்சியில் இன்னும் சில காலம் மோடியின் செல்வாக்கு குறையாது என்ற மதிப்பீடு மற்ற பலன்களை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்திருக்கிறது.
முதல்வர் இல்லாவிட்டாலும் ராஜ்ய சபா உறுப்பினர் மத்திய அமைச்சர் என்று உத்தரவாதம் அளிக்க கூடும். ரஜினி மயங்க கூடும்.
This website uses cookies.