Latest News

காவிரிப் பிரச்னையில் முகமிழந்த மோடி??!!

Share

உச்சநீதி மன்றத்தில்   காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்னையில்  மோடி அரசு அடித்த அந்தர் பல்டி அவரது உண்மை முகத்தை உலகுக்கு காட்டி விட்டது.

மோடி ஏதோ புனிதர் என்ற மாயை உடைந்து விட்டது.      சாதாரண அரசியல்வாதிதான் அவர் என்ற நிதர்சனம் வெளிப்பட்டது.

மூன்று நாள் முன்பு உச்சநீதிமன்றத்தில் ஆணையம் அமைக்க ஒப்புக்கொண்டு நான்காம் நாள்  அந்த அதிகாரம் பாராளுமன்றத்து க்குத்தான் உள்ளது என்றும் உச்ச நீதிமன்றத்துக்கு அல்ல  என்றும்  வாதிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினர் தலைமை வழக்குரைஞர் முகுல் ரோகட்கி.

ஏன் ஒப்புக்கொண்டு  இப்போது மறுக்கிறீர்கள் என்ற கேள்விக்கு தவறு நிகழ்ந்துவிட்டது என்றார்.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் கர்நாடக பொது தேர்தலில் காங்கிரசுக்கும் பா ஜ கவுக்கும் தான் போட்டி.

காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு கொடுக்கும் எந்த தீர்வை யார் கொடுத்தாலும்  அங்கே வெல்ல முடியாது என்ற அளவில் அந்த மக்களின்  மன நிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

நர்மதா, கோதாவரி, கிருஷ்ணா நதி நீர் பிரச்னைகளில் அந்தந்த மாநில முதல்வர்கள் சுமுகமாக பேசியே தீர்வு கண்டு  அதை இறுதிதீர்ப்பாக நீதிமன்ற மூலம்  தீர்ப்பாக பெற்றிருக்கிறார்கள்.

இன்று உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பின் மீது மூன்று  மாநிலங்களும் செய்திருக்கும் மேன்முறையீட்டை  விசாரிக்கத்  தக்கதா என்று விசாரிக்கிறது.

அதன்  பின்தான் இறுதி தீர்ப்பை எப்படி அமுல் படுத்துவது என்று உத்தரவிடும்.

இதுவரை உச்சநீதி மன்றம் கொடுத்த எந்த உத்தரவையும் கர்நாடக முழுமையாக நிறைவேற்றியதில்லை.

அதற்கே உச்ச நீதி மன்றம் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

தீர்வை  நோக்கி நகரும் என்று நம்பப் பட்ட தீர்ப்பு இன்னும் தொங்கலில் நிற்கிறது.

உச்ச நீதி மன்றம் மட்டுமே இப்போது ஒரே நம்பிக்கை தரும் அமைப்பாக தமிழர்களுக்கு தெரிகிறது.

தன் போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் பா ஜ க வும் தமிழ் நாட்டை  மறந்து விட வேண்டியதுதான்.

மாநில கட்சிகள் போதும் தேசிய கட்சிகள் வேண்டாம் என்ற முடிவுக்கு தமிழர்கள் வந்து வெகு கால மாகிவிட்டது.

அதற்காக தமிழகத்திற்கு துரோகம் செய்வோம் என்று அகில இந்திய கட்சிகள் முடிவு செயவார்களானால் அவர்கள் செயலால் பாதிக்கப் படப் போவது  தேசியம்தான் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

உலகம் சுற்றி வந்து  காஷ்மீரில் பாகிஸ்தானோடு மோதி  நல்ல பெயர் வாங்கப் பார்க்கும் மோடி தமிழ் நாட்டில் பெயர்  கெட்டால் என்ன என்ற முடிவுக்கு வந்து விட்டாரா?

 

This website uses cookies.