ஈரோடு மாவட்டம் கும்டாபுரத்தில் 300 ஆண்டுகள் பழைமையான பீரேசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளிக்கு அடுத்த மூன்றாம் நாள் பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவதற்காக விநோதமாக சாணியடி திருவிழா நடந்து வருகிறது.
அதில் கலந்து கொள்பவர்கள் சாணியை எடுத்து ஒருவர் மீது ஒருவர் அள்ளி வீசிக்கொள்வார்களாம்.
அதில் கலந்து கொண்டவர்களின் புகைப்படத்தை தினத்தந்தி வெளியிட்டிருந்தது.
வேண்டுதல் நிறைவேறியது. எனவே நேர்த்திக் கடனாக இந்த நிகழ்வை நடத்துகிறோம் என்று பக்தர்கள் சொல்லலாம்.
அது எப்போது ஆரம்பிக்கப் பட்டது . ? அதில் பொருள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யக் கூடவா பக்தர்கள் தயாராக இருக்ககூடாது.
அறிவுக்கு பொருந்தாத வழக்கங்களை பக்தி என்ற பெயரால் அடிமைகளாக்கும் முயற்சியில் யாரோ இதை ஏன் புகுத்தியிருக்ககூடாது ?
பக்தர்கள் என்றால் சிந்திக்காமல் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவார்கள் என்பதுதான் இலக்கணமா?
பக்தர்கள் எனப்படுவோர் சிந்திக்கட்டும்.