2016-17 ல் மத்திய அரசு பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயம் !!! பா ஜ க அரசின் ஆதிக்க வெறி???!!!

2016-17 ல் மத்திய அரசு பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயம் என மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி அறிவித்திருக்கிறார்.

தமிழ் நாட்டில் கலைஞர் , வைகோ, அன்புமணி ராமதாஸ் போன்றோர் தவிற பெரிய எதிர்ப்பு எழுந்ததாக தெரியவில்லை.

ஒருவேளை அடுத்த ஆண்டு பள்ளிகள் துவங்கும்போது பிரச்சினை வெடிக்கலாம். அல்லது நீதிமன்றங்கள் இதை எடுத்துக்கொண்டு ஏதாவது உத்தரவு பிறப்பிக்கலாம் .
இந்தியை திணிக்க முடியாமல் சமஸ்கிருததை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருக்கிறதா ?

தமிழ் வங்காளம் தவிர இதர மொழிகள் சமஸ்கிருதம் இல்லாமல் இயங்க முடியாது.
எனவே அவர்கள் சமஸ்கிருத திணிப்பை தீவிரமாக எதிர்ப்பார்கள் என எதிர் பார்க்க முடியாது. இதைத்தான் மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

கட்டாயமாக்கும் எதுவுமே மக்களால் ஏற்றுக்கொள்ளப் படும் என்று எதிர் பார்க்க முடியாது.
தவிர எதிர் மறையாக அரசுக்கு எதிரான உணர்வை தூண்டும் என்பது மட்டும் நிச்சயம்.
மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டிய அவசர பிரச்சினை இது.