சேகர் ரெட்டி ஓ பி எஸ் சின் பினாமி என்று நம்பப் படுகிறார்.
திருப்பதி தேவஸ்தான டிரஸ்டியாகவும் இவர் இருக்கிறார். தமிழ் நாட்டு அரசியலில் இவர் பெரிய அளவில் ஒப்பந்த வேலைகளை செய்து வருகிறார்.
வீராணம் ஏரி தூர வாரும் வேலையையும் இவர்தான் பார்த்து வருகிறாராம் .
இப்போது தமிழ் நாட்டு முதல்வர் ஆக ஓ பி எஸ் பொறுப்பு எடுத்துக் கொண்டபிறகு கட்சியின் பொது செயலாளராக யார் வருவது என்ற பிரச்னையில் மத்தியில் ஆளும் பா ஜ க அரசு மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டு தான் விரும்பும் நபரே வர வேண்டும் என விரும்புகிறது.
சசிகலா வருவதை பா ஜ க விரும்பவில்லையாம். சங்கப் பரிவாரங்கள் விரும்ப வில்லை. ஆனால் ஓ பி எஸ் சசிகலாவுக்கு ஆதரவாக இருக்கிறாராம். எனவே அவரை மிரட்டி பணிய வைக்க பா ஜ க அரசு முடிவு எடுத்து அதன் விளைவுதான் ரைடு என்கிறார்கள்.
120 கோடி ரூபாய் பழைய நோட்டுகளும் அதில் 10 கோடி ரூபாய்க்கு புதிய 2000 ரூபாய் நோட்டுகளும் 100 கிலோ தங்கமும் பிடிபட்டிருக்கின்றன.
மோடியின் செல்லாத நோட்டு உத்தரவு வந்தபின் பணக்காரர்கள் எந்த துன்பமும் படாமல் புதிய நோட்டுகளை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
நடுத்தர வர்க்கம்தான் வங்கிகளில் வரிசையில் நிற்கிறார்கள்.
இது வழக்கமான ஐ டி ரைடு என்று எடுத்து கொள்ள முடியாது.
பா ஜ க என்னதான் விளக்கம் சொன்னாலும் மக்கள் நம்ப மாட்டார்கள்.
இனி வரும் தலைவர்கள் ஜெயலலிதா போல திராவிட இயக்கத்தில் இருந்து கொண்டே அதன் ஆணிவேரை வெட்டி எரியும் பணியில் யார் இறங்கத் தயாராக இருப்பார்கள் ?
அ தி மு க தலைவர்கள் துணிந்து நிற்பார்களா? அல்லது பயந்து பா ஜ க விடம் பணிவார்களா ?
This website uses cookies.