எடப்பாடி அணி தினகரன் அணி அதற்குள் திவாகரன் அணி ஓ பி எஸ் அணி தீபா அணி என்று எத்தனை அணிகள் திரண்டாலும் அத்தனை பேரும் ஒன்றில் மட்டும் வாய் பேசா மௌனிகளாகவே மாறிப் போகிறார்கள்.
அது பா ஜ க வுக்கு ஆமாம் சாமி போடுவது. காலில் விழுந்து கிடப்பது. ஒரு வார்த்தை மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுக்காமல் இருப்பது.
மொத்தத்தில் அடித்தாலும் அழாமல் இருப்பது.
இந்த அடிமைகளில் யார் நல்லவர்கள் என்று ஏன் பார்க்க வேண்டும்?
எல்லாருமே ஏதோ ஒரு வகையில் மத்திய அரசின் கழுகுப் பார்வையில் இருக்கிறார்கள்.
சி பி ஐ வருமான வரித்துறை அமலாக்கத் துறை என்ற மூன்றும் பா ஜ க வின் அரசியல் வியூகங்களை அமுல் படுத்தும் அதிகார மையங்கள். எல்லாருமே இவற்றிற்கு அஞ்சுகிறவர்கள்.
இந்த நிலை நீடிப்பது நல்லதல்ல.
சட்ட மன்றத்தில் ஒட்டு வாங்க பண பேரம் பேசியதாக வந்த வழக்கில் வழக்கு பதிவு செய்ய தேர்தல் கமிஷன் போட்ட உத்தரவை அமுல் படுத்த வில்லை.
தானாகவே அடித்துக் கொண்டு அழியப் போகும் ஆதாயக் கட்சியாக அ தி மு க மாறி விட்டது.
அது எவ்வளவு சீக்கிரம் நடக்கிறதோ நல்லது.
கொஞ்ச நஞ்சம் அந்த கட்சியில் ஒட்டிக கொண்டிருக்கும் திராவிட இயக்க பற்றாளர்கள் மறு பரிசீலனை செய்யுங்கள். இன்னும் ஏன் ஒட்டிக கொண்டிருக்க வேண்டும். எங்கே போக வேண்டுமோ அங்கே போகலாமே!!
காலம் தாழ்த்துவது கூட நாட்டிற்கு செய்யும் கேடு என்பதை உணருங்கள்.
This website uses cookies.