…..ன்னிப் பயல்கள் சிம்புவுக்கும் அநிரிதுக்கும் சிறையில் பாட்டெழுதி இசையமைக்க வாய்ப்பு ???!!!!!

Share

வெள்ளத்தில் மூழ்கி நாடே தத்தளித்துக் கொண்டிருக்கும் நேரம்!
வடக்கு தெற்கு என்றில்லாமல் நடிகர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பன்னிப்பயல்கள் சிம்புவும் அனிருதும் ஒரு ஆபாச பாட்டை வெளியிட்டு அது ஊர் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியும் அளவுக்கு போய்  இருக்கிறது. அநேகமாக கைது செய்யப் படலாம் அல்லது அவர்கள் முன்ஜாமீன் பெறலாம். யு டுபிலும் த்விட்டேரிலும் இவர்கள் செய்த நாசம் நாறிக்கொண்டிருக்கிறது.

விளைவு தெரியாமல் அவர்கள் நடந்திருப்பார்கள் என்று நினைக்கவே வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்கள் தாங்கள் செய்யும் செயல் குற்றம் என்று தெரிந்தே செய்திருக்கிரர்கள்.
இது வெறும் ரிகர்சல்தான் வெளியீடு அல்ல என்றும் சொல்ல முடியாது.

என்னா ……..க்கு லவ் பண்றோம் ? என்ற பாடலில் இசையால் மறைக்கப் படும் வார்த்தையை நன்றாகவே கேட்க முடிகிறது. அந்த ஆபாச வார்த்தையை சாதாரணமாக வசை பாடும்போதோ சண்டையிலோ கீழ்த்தர மனிதர்கள் பயன் படுத்தும் நிலையை பார்க்கிறோம்.

ஆனால் அதை எழுத்து வடிவில் இசை வடிவில் சமூகத்தில் சாதாரணமாக ஆக்கிவிட வேண்டும் தமிழ் சமுதாயத்தில் இது வழக்கம்தான் என்று தரம் குறைக்க வேண்டும் என்ற சதி தெளிவாக தெரிகிறது. யார் சதி செய்தது யார் விழுந்தது என்பது விசாரணைக்கு உரியது.
டி ஆர் மகன் இப்படியா பெயர் வாங்க வேண்டும்?

தனுஷுக்கு போட்டியாக எதாவது செய்ய வேண்டும் என்றால்

” கொலவெறி’ மாதிரி யோசித்திருக்க வேண்டும். அதைவிட்டு குப்பையில் விழுந்து புரள வேண்டுமா?

குறைந்த பட்ச தண்டனை கூட இல்லாமல் இவர்கள் தப்பித்தால் நாளைக்கு இன்னொருவன் இதைவிட மோசமாக எழுதி இசையமைப்பான் ???!!!

This website uses cookies.