1937 ல் நேருவால் துவங்கப் பட்டது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. 2008 ல் நிறுத்தப்பட்டது. உரிமை அசொசியாட்டேட் ஜர்னல் , 2000 கோடி நிலங்கள் பல நகரங்களில். இதற்கு காங்கிரஸ் 90 கோடி வட்டியில்லா கடன் வழங்கியது . இந்தக் கடன்களோடு சோனியாவும் ராகுலும் பெரும்பங்கு வகிக்கும் தனியார் டிரஸ்ட் ஆன யங் இந்தியன் வெறும் 50 லட்சம் கொடுத்து அசோ.ஜ.கம்பனியை வாங்குகிறது. அ.சொ. வுக்கு கொடுத்த 90 லட்ச ரூபாய் கடனை காங்கிரஸ் தள்ளுபடி செய்து விடுகிறது. ஆக வெறும் 50 லட்ச ரூபாய் செலவில் சோனியாவும் ராகுலும் 2000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை த் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.
இதில் ஏமாற்றப்பட்டது காங்கிரஸ் மற்றும் , பொதுத்துறை கம்பனியான அசோ.ஜ.வின் பங்குதார்கள்.
சுப்ரமணியன் சுவாமி தொடுத்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் போதிய முகாந்திரம் இருப்பதாக கூறி ஆஜராக உத்தரவிட்டிருப்பதுதான் பிரச்னை.
கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி எட்டுக்கும் மேற்பட்ட காரணங்களை கூறி அளித்த தீர்ப்புதான் காங்கிரசை எரிச்சலை அடைய வைத்திருக்கிறது.
உண்மையில் சம்பந்தப் பட்ட மூன்று பேருமே ,சோனியா ,ராகுல் கட்டுபாட்டில் இருப்பதுதான். அவர்கள் தங்களுக்கு தாங்களே இப்படி உரிமை மாற்றம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்தது. ?
சரி. இதற்கும் நாடாளுமன்றம் நடப்பதற்கும் என்ன சம்பந்தம்? காரணமே சொல்லாமல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் காங்கிரஸ் முடக்கி வைத்திருக்கிறது.
வெளிப்படையாக விவாதத்துக்கு வரவும் மறுக்கிறது காங்கிரஸ்.
சுப்ரமணியன் சுவாமி நல்லவறல்ல. ஆனால் அவர் எழுப்பிய பிரச்சினை என்பதால் பதில் சொல்ல மாட்டோம் விசாரணையை எதிர் கொள்ள மாட்டோம் என்பதும் ஜனநாயகத்துக்கு எதிரானது.
நான் இந்திரா மருமகள் – பயப்பட மாட்டேன் என்பதும் இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று எதிர் குற்றம் சாட்டுவதும் எந்த வகையிலும் பயனளிக்காது.
நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் நிரபராதித் தன்மையை இருவரும் நிரூபிக்கட்டும்.
சரக்கு வரி மசோதா நிறைவேற்றப் பட மோடி எடுத்த சுமுக நடவடிக்கைகள் பலன் தருவது சந்தேகமே???