சிம்பு தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து விலகப் போகிறாராம்.
தன்னை உதாசீனப் படுத்தியதால் எடுக்கப் பட்ட முடிவாக அவர் அறிவித்திருப்பதில் பெருமை இல்லை. உதாசீனப் படுத்த முடியாதவராக இருப்பதே மரியாதை.
மலையாள கன்னட தெலுங்கு நடிகர்கள் தங்களுக்கு என தனி நடிகர் சங்கங்கள் கண்ட பிறகு தமிழ் நாட்டில் மட்டும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஏன் ?
மற்றவர்கள் வருவதும் நடிப்பதும் தவறில்லை. கலைக்கு மாநிலம் மொழி தடையாக இருக்க கூடாது என்பது உண்மைதான்.
அதேபோல்தான் மொழிவழி மாநில உருவாக்கமும். பிற மாநில மொழிகளுக்கு மரியாதை தரும் அதே நேரத்தில் பிறர் நம்மை எப்படி நடத்துகிறார்களோ அப்படியே பிறரை நாம் நடத்துவதே முறையாகும்.
அந்நியரை கொண்டாடி நம்மவரை அடக்கி வைக்க நாமே துணை போவது கொடுமை.
பெயரை மாற்று என்ற கோரிக்கை வலுப்பெற வேண்டும்?!
மற்ற மாநிலங்களில் அவர்கள் பெயர் மாற்றம் செய்த பிறகு நம்மவர்கள் அங்கே திரையில் தோன்றுவதை போல் இங்கே நாம் பெயர் மாற்றம் செய்த பிறகு மற்றவர்கள் இங்கேயும் தோன்ற முடியும் .
பெயர் மாற்றத்தில் என்ன இருக்கிறது என்று பூசி மெழுகாமல் உடனடியாக பெயரை மாற்றட்டும் நடிகர் சங்கம். நடிகர் சங்கம் மட்டுமல்ல எல்லா திரைத்துறை சங்கங்களும்தான்.
This website uses cookies.