திருப்பதி வேங்கடாச்சலபதி சுவாமி மீது நம்பிக்கை வைப்பதோ நேர்த்திக்கடன் செலுத்துவதோ அனைவரின் தனிப்பட்ட உரிமை. அதில் தவறேதும் இல்லை.
ஆனால் முதல்வரானபின் அரசு செலவில் ஐந்து கோடி செலவில் நகைகளை சுவாமிக்கு செலுத்தி நேர்த்திக்கடனை செலுத்தியிருக்கிறார் ராவ்.
சுவாமி தனக்கு சாலிகிராம ஹாரம் வேண்டும் என்றோ கண்டே ஹாரம் வேண்டும் என்றோ கேட்கவில்லை. இவர் தன் கோரிக்கையை வைத்தார். தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டார்.
அதற்கு அரசு கஜானாவில் இருந்து செலவு செய்வது சரியா என்ற கேள்வியை முதல்வரின் செயல் எழுப்பி யிருக்கிறது.
இடது சாரிகளும் இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.
சந்திரசேகர ராவ் முன்பே பல கோடி செலவில் யாகங்கள் செய்திருக்கிறார். கடவுள் கோடிகணக்கில் யாகங்களை செய்பவருகுத்தான் அருள் பாலிப்பார் என்றால் எத்தனை பேர் செய்ய முடியம்.?
அதேபோல் வீரபத்ர சுவாமிக்கு தங்க மீசையும் அர்ப்பணம் செய்திருக்கிறார். வாழ்க நம்பிக்கை. இதேபோல் மக்களது நல்வாழ்விற்கும் மக்கள் எதிர் நோக்கும் பிரச்னைகளுக்கும் வேண்டிக்கொண்டால் நல்லது. அப்படியாவது மக்கள் பிரச்னைகள் தீரட்டுமே .
சொந்த நம்பிக்கைகளை அரசு நிர்வாகத்தில் புகுத்தும் போக்கு மிகவும் கண்டிக்கத் தக்கது.