ஆறு சதம் மட்டுமே புழங்கும் கறுப்புப் பணத்தை மீட்கப் போகிறேன் என்று மோடி கொண்டுவந்த செல்லாக் காசு திட்டம் பணால் ஆகிக் கொண்டு இருக்கிறது.
ஏழை பாழைகளை கசக்கி பிழிந்து கொடுமைப் படுதியதைத் தவிர வேறு எந்த சாதனையையும் இந்த திட்டம் சாதிக்கவில்லை.
ஏற்கேனவே ஜன்தன் திட்டத்தில் சேர்ந்தவர்களின் கணக்குகளில் ஒரு லட்சம் கோடிக்கு மேல் சேமிப்பு சேர்ந்திருக்கிறது. இது எல்லாம் கருப்பு பணம் என்றால் எப்படி அதை நிருபிக்க முடியும்?
பலவகைகளிலும் கருப்பு பணம் நல்ல பணமாக பதுக்க பட்டு விட்டது.
அதில் முக்கியமாக கோவில், மடங்கள் கருப்பு பணம் பதுக்க பாதுகாப்பான இடங்களாக மாறி வருகின்றன.
ஐம்பது சதம் கமிஷன் கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.
பிரபல சாமியார்கள் முப்பந்தைந்து சதம் கமிஷனுக்கு மாற்றிக் கொடுக்கிறார்கள்.
திருப்பதி, திருச்செந்தூர் , பழனி, கேரளாவின் புகழ் பெற்ற பத்மநாப சாமி கோவில் போன்றவற்றில் பல கோடி ரூபாய்கள் உண்டியலில் அதிக வருவாய் கிடைத்துள்ளன. அதுவாவது கள்ளப்பணம் கோவில் காரியத்துக்கு போகட்டுமே என்று போடப் படுவதை ஏற்றுக்கொள்ளலாம். ஏனென்றால் எந்த தனி நபரும் ஆதாயம் அடையப் போவதில்லையே?
ஆனால் ஆன்மிக மையங்கள் கருப்பு பணம் மாற்றும் மையங்களாக மாறுவதை எப்படி ஏற்றுக் கொள்வது?
பா ஜ க அரசு இந்து ஆதரவு அரசு என்பதால் கண்டு கொள்ளாமல் இருக்கிறதா?
This website uses cookies.