புலி , மீன், வில் அம்பு தமிழ் நாட்டின் தனிக்கொடி ஆக வேண்டும்.
கர்நாடக அரசு அதற்கென தனி கொடி வேண்டும் என்று தீர்மானித்து அதை செயல் படுத்த ஒன்பது பேர் கொண்ட ஒரு தனிக்குழுவை அமைத்துள்ளது.
கர்நாடகாவில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் முடிவில் ஜெய் கர்நாடக் என்று ஒலி முழக்கம் எழுப்புவார்கள். இதுவரை எவரும் ஆட்சேபித்த தில்லை .
ஏற்கெனெவே ஜம்மு காஷ்மீர் அரசு தனக்கென தனிக்கொடி கொண்டுள்ளது.
சித்தராமையா காங்கிரஸ்காரர். தேசிய ஒற்றுமையில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளவர். அவரது கட்சி இதை அங்கீஹரிக்கப் போகிறதா என்பதை இனிமேல் தான் பார்க்க வேண்டும். அங்கீகரிக்க வேண்டும்.
இந்திய நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் தனக்கென தனிக்கொடி கொண்டிருப்பதால் என்ன விளைவு ஏற்பட்டு விடப் போகிறது. ?
தமிழ்நாடு தனக்கென தனியாக தமிழ்த்தாய் வாழ்த்து கொண்டிருக்கிறது. தேசிய ஒற்றுமைகேட்டு விட்டதா? ஒவ்வொரு மாநிலமும் கொண்டிருக்கின்றன. என்ன கெட்டு விட்டது.?
அமெரிக்காவின் ஐம்பத்து ஒரு மாநிலமும் தங்களுக்கென தனிக் கொடி வைத்திருக்கிறார்கள். ஒற்றுமை கெட்டு விட்டதா?
தனித்துவத்தை வளர்க்கும் போதுதான் ஒற்றுமை வலுப்பெறும். மாறாக தனித்துவத்தை சிறுமைப் படுத்தினாலோ அடக்க முயற்சித்தாலோ பிரிவினை மனோபாவம் தான் வளரும்.
ஒற்றுமை உணர்வில் கலந்து நிற்க வேண்டும். நான் இந்தியன் என்ற உணர்வு தானாக துளிர்க்க வேண்டும். நிலைக்க வேண்டும்.
புலி மீன் வில் அம்பு ஏற்கெனெவே முக்குலத்தோர் அமைப்புகள் பயன் படுத்தி வருகிறார்கள்.
அவர்களை வற்புறுத்தி ஆட்சேபிக்க கூடாது என்று தடுக்க வேண்டும்.
ஆட்சேபனைகளை சமாதானப் படுத்த ஒரு குழு அமைக்க வேண்டும்.
தேவைப்பட்டால் வேறு ஒரு புதுக் கொடியை தேர்ந்தெடுக்க வேண்டும். அது எது வேண்டுமானாலும் இருக்கட்டும்.
இதையெல்லாம் செய்யும் அளவு இன்றைய தமிழக அரசு இருக்கிறதா?
டில்லிக்கு காவடி தூக்கும் இவர்கள் இதெற்கெல்லாம் சரிப்பட மாட்டார்கள்.
மக்கள் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கினால் இவர்கள் அப்போது முன்னுக்கு வருவார்கள்.
சாதி என்னும் சதியால் பிளந்து பட்டு கிடக்கும் தமிழ் சமுதாயம் இப்படி தமிழ் உணர்வால் ஒன்று படுவது மட்டுமே சாத்தியம் .
தமிழக அரசு தமிழ் நாட்டுக்கு தனிக்கொடியை பெற்றுத் தருவது வரலாற்றுக் கடமை.
This website uses cookies.