ராணுவ முகாம்களின் மத்தியில் வசித்து வருபவர்கள் யாழ் தமிழர்கள்.
போர் முடிந்து ஏழாண்டுகள் ஆகியும் இன்னமும் எந்த விடுதலையும் கிடைக்காமல் தவித்து வருகிறது தமிழ்ச் சமூகம்.
மாநில அரசு என்று ஒன்று இருக்கிறது. அதற்கு அரசிற்கான எந்த உரிமையும் கிடையாது. நிலம், காவல் எல்லாம் சிங்கள மத்திய அரசின் கையில் . முதல் அமைச்சர் ஒரு ஒய்வு பெற்ற நீதிபதி. காலத்தின் கட்டாயம் கருதி பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பவர்.
அதிகாரம் வேண்டும் என்று வேண்டுகோள் வைப்பது மட்டுமே அவரால் முடிந்த காரியம்.
உலக நாடுகள் எதுவும் எதையும் கண்டுகொள்வதில்லை.
உரிமைப் போரை அற வழியிலும் போர் வழியிலும் தொடர்ந்து போராடி பேரழிவுகளை சந்தித்து மீண்டும் அறவழிப் போரை தொடர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தமிழ்ச் சமூகம்.
இப்போது வாழக் கூட விடக் கூடாது என்று சுட்டுக் கொல்கிறார்கள் .
நடராஜ கஜன், பவுன்ராஜ் சுலக்சன் என்ற இரண்டு மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கும்போது நிறுத்தச் சொன்னதற்கு நிற்காமல் போனதால் சுட்டுக் கொன்றிருக் கிறார்கள்.
போராட்டம் நடத்தியதற்குப் பிறகு சிலரை கைது செய்வதாக அறிவிப்பு வெளியானது.
விசாரணை தண்டணை எதுவும் சிங்கள அரசின் கண் துடைப்பு வேலையாக அமையும்.
என்று முடியும் இந்த அரச பயங்கர வாதம்?
This website uses cookies.