500 கோடியும் 80 சீட்டும் ; மத்திய மந்திரி பதவி இவைகளை தி மு க வும் பா ஜ கவும் தரத் தயாராக இருந்தும் எங்களோடு விஜயகாந்த் சேர்ந்திருக்கிறார் என்று விஜயகாந்த் சொல்லாததை வைகோ சொல்லியிருக்கிறார்.
வைகோ யாரையும் வாழ வைத்ததாக வரலாறு இல்லை. அவர் சென்ற இடம் விளங்கியதும் இல்லை.
அவர் சொன்னது உண்மை என்றால் பிரேமலதா அதை மறுப்பது ஏன் ? தி மு க வுடன் பேச்சுவார்த்தையே நடக்க வில்லை என்று அவர் மறுத்திருக்கிறார். பேச்சுவார்த்தையே நடக்காத போது பேரத்திற்கு என்ன வழி?
கலைஞர் சட்ட அறிவிப்பு அனுப்பியிருக்கிறார் . வரவேற்பதாக வைகோ சொல்லியிருக்கிறார். வழக்கு நடக்கட்டும் உண்மை தெரியட்டும்.
அதுவரை இந்த அவதூறு வேலை செய்யும் என்று எண்ணியிருக்கலாம் .
சதியின் மொத்த உருவமாக வைகோ மாறியிருக்கிறார். கூட்டு சேர்வதை ரகசியமாக வைத்திருந்து இப்போது வெளியிட்டோம் என்பது ஒரு வியூகமல்ல. குணத்தின் அடையாளம். பேச்சு வார்த்தை வெளிப்படையாக இருக்க வேண்டும்.
அப்படியானால் பேரங்களுக்கு வைகோ பழக்கப்பட்டவர் என்றல்லவா ஆகிறது. தான் நடத்திய உடன்பாடுகளுக்கு பணம்தான் ஒரு மையமாக இருந்தது என்பதை ஒப்புகொள்வாரா?
தன்னை சிறையில் அடைத்த ஜெயலலிதாவுடன் அவர் சமரசம் செய்து கொண்டது எதற்காக?
ஒவ்வொரு சட்ட மன்ற தேர்தலுக்கு மட்டும் தனியாக நிலை எடுப்பது எதற்காக.?
விஜயகாந்தை முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவித்த கணமே அவர்கள் தோற்பது உறுதியாகி விட்டது.
நாலு வார்த்தை ஒழுங்காக பேசத் தெரியாது. பத்திரிகையாளர்களுடன் உரையாட தெரியாது. எந்த பிரச்னை பற்றியும் சட்ட மன்றத்தில் பேசியதும் இல்லை. நான்கு ஆண்டுகள் எதிர்க் கட்சி தலைவராக இருந்து என்ன சாதித்தார்?
மனைவியையும் மைத்துனரையும் தவிர வேறு யாரையும் நம்பாமல் அரசியல் கம்பெனி நடத்தி வியாபாரம் செய்து வரும் நபராகத்தான் விஜயகாந்தை தமிழ்ச் சமூகம் பார்க்கிறது.
இது வரை எந்த கொள்கையை அவரது கட்சி முன்னிறுத்தி இருக்கிறது.?
தமிழ்ச் சமூகத்திற்கு இத்தைகைய துரோகத்தை இழைக்க திருமாவளவனுக்கு எப்படி மனம் வந்தது. ?
அன்புமணி மேலும் ராமதாஸ் மேலும்தான் கோபம வருகிறது.
இடது வலதுகள் தவறாக கணக்கிட்டு விட்டார்கள். எதோ கொஞ்சம் மான உணர்வில் எங்கள் கூட்டணி மக்கள் நல கூட்டணிதான் விஜயகாந்த் கூட்டணி இல்லை என்று தோழர் நல்லகண்ணு கூறிவிட்டார். தொகுதி உடன்பாடுதான் கூட்டணி இல்லை என்றும் சொல்லிவிட்டு அப்புறம் எப்படி முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை ஏற்றுக்கொண்டீர்கள் என்றால் சொதப்பல் பதில்தான்.
வெற்றி பெற்ற பிறகு கூட்டாக செயல் திட்டம் வகுப்பார்களாம். அதுவரை தனிதனி தேர்தல் அறிக்கை தானாம்..
நாதியற்றுப் போனாயடா தமிழா என்று நொந்து கொள்வதை விட வேறு என்ன செய்ய முடியும் ?
This website uses cookies.