தவறான செய்திகளால் சில நேரங்களில் தவறான விமர்சனங்கள் எழுகின்றன.
சட்டமன்ற வாக்கெடுப்பில் உறுப்பினர் ஆறுமுகம் சிகிச்சையில் இருந்ததால் வரவில்லை என செய்திகள் பரவின. ஆனால் அவர் டிஸ்சார்ஜ் ஆகி சபையில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்து இருக்கிறார். அவர் வாக்களித்த செய்தி ஊடகங்களில் வரவில்லை.
அதேபோல் மோத்த அ தி முக எண்ணிக்கை 134 என்ற செய்தியும் மாலைமலர் பத்திரிகையில் வந்தது. உண்மையில் அது 135 ஆக இருக்க வேண்டும்.
ஜெயலலிதா மறைவினால் 233 ஆக குறைந்த மொத்த உறுப்பினர்களில் கலைஞர் வரவில்லை.
232
வெளியேறிய திமுக காங்கிரஸ் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் 97 .
மீதம் உள்ள 135 உறுப்பினர்களில்
பன்னீர்செல்வம் அணியில் எதிர்த்து வாக்களித்தோர் 11
வாக்களிக்காத சபாநாயகரும் கோவை அருண்குமாரும் 2
மீதமுள்ள 122 அ திமுக உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தவறான செய்திகள் வெளியாவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் . ஏனென்றால் அது தவறான விமர்சனங்களுக்கு வித்திடுகின்றன.
எச்சரிக்கை ! எச்சரிக்கை !
This website uses cookies.