நடிகர் தனுஷ் மேலூர் கதிரேசன் மகனா இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனா?
இப்படி ஒரு வழக்கு இதுவரையில் நடிகர்கள் சம்பத்தப் பட்டு வந்ததில்லை.
கதிரேசன் கேட்பதெல்லாம் வாழ்க்கை படி. பணம் பறிப்பதற்காக யாரோ சொல்லிக் கொடுத்து இப்படி ஒரு பொய் வழக்கு என்று தனுஷ் சொல்கிறார். பொய் என்றால் சிறைக்குப் போகவேண்டும் என்பது தெரியாமலா வழக்குப் போட்டிருப்பார்கள்?
பள்ளிக் கல்விச் சான்றிதழ்கள் அதில் காணும் மச்சங்கள் ,என்றெல்லாம் விசாரணை போய்க்கொண்டிருக்கிறது
மருத்துவர்கள் சான்றிதழ்கள் பிரச்னையை தீர்க்கும் என்றால் அதிலும் கேள்விகள். லேசர் சிகிச்சை மூலம் மச்சங்கள் அழிப்பு என்று புகார்.
சான்றிதழ்களில் அவர் தலித் என்றும் இருக்கிறதாம். கஸ்தூரி ராஜா தான் தலித் என்று சொல்லிக்கொள்ள வில்லை.
டி ஏன் ஏ பரிசோதனைக்கு தனுஷ் ஒப்புக்கொள்ளவில்லை. ஏன்?
இருவரில் ஒருவர் சொல்வது பொய். யார் அவர்?
ரஜினிகாந்தின் மருமகன் மீது இப்படி ஒரு விசாரணை நடப்பதை அவரே சங்கடத்துடன் தான் பார்த்துக் கொண்டிருக்க முடியும்.
தனுஷ் போன்ற நம்ம வீட்டுப் பையன் என்ற பெயரை எடுத்த நல்ல கலைஞனை சுற்றி இப்படி ஒரு விவாதம் நடப்பதை அவரது நலம் விரும்பிகள் விரும்ப மாட்டார்கள்.
விசாரணையில் யார் மகன் தனுஷ் என்றுதான் தீர்ப்பு வர முடியும்.
இன்னொரு கேள்விக்கு என்ன விடை?
இரு தரப்பு தாக்கல் செய்திருக்கும் சான்றிதழ்கள் படி இரண்டு பிள்ளைகள் படித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்.
ஒருவர் தனுஷ் . மற்றொருவர் யார்? அவர் எங்கேயிருக்கிறார்? ஏன் அவர் இன்னும் வெளிப்படவில்லை. ? ஏன் அவர் கண்டுபிடிக்கப் பட வில்லை.? அவர் மறைந்திருக்கிறாரா? மறைத்து வைக்கப் பட்டிருக்கிறாரா ? அல்லது இரண்டில் ஒரு சான்றிதழ் பொய்யா?
கவுண்டமணி -செந்திலின் வாழைப்பழக் காமெடி போல் கேள்வி இருந்தாலும் உண்மை அதில்தான் ஒளிந்திருக்கிறது.
அந்த இன்னொரு தனுஷ் எங்கே?
This website uses cookies.