பிரச்னைகளால் தமிழ்நாடே தத்தளித்துக் கொண்டு இருக்கிறது.
போதாது என்று வந்துவிட்டது ஆர் கே நகர் இடைதேர்தல்.
ஜெயலலிதாவின் மரணத்தால் வந்திருக்கும் இந்த தேர்தல் தமிழ் நாட்டின் அரசியல் போக்கையே மாற்றும் தன்மை கொண்டது.
சசிகலாவின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி – ஓ பி எஸ் – தீபா என்று பல அணிகளாக பிரிந்திருக்கும் அ தி மு க அணிகள் எல்லாமே தூக்கி பிடிப்பது யாரை?
உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று உறுதி செய்யப் பட்டு மரணம் ஆனதால் தண்டிக்க இயலாமல் போன ஜெயலலிதாவை!
இம்மாதிரி நிலை இதற்கு முன் வந்ததில்லை. எந்த முதல்வரும் ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப் பட்டு சிறைக்கு சென்ற்தில்லை. .
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறதா என்பதில் தான் இரு தரப்புக்கு இடையே முட்டல்.
அதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும்.
ஆனால் புத்தியுள்ள தமிழன் என்ன செய்ய வேண்டும்?
ஊழல் குற்றவாளி ஜெயலலிதா பெயரை யார் சொல்கிறார்களோ அவர்களை நாங்கள் புறக்கணிப்போம் என்ற முடிவை ஆர் கே நகர் தொகுதி மக்கள் எடுக்க வேண்டும்.
இடைதேர்தல் முடிவால் புதிய ஆட்சி உருவாகவோ இருக்கும் ஆட்சி கவிழவோ போவதில்லை.
எனவே விளம்பரங்களுக்கு ஆக போட்டியிடுபவர்கள் தான் அதிகம் இருப்பார்கள்.
அவர்களில் எந்த கட்சியினர் அல்லது வேட்பாளர் ஆளும் கட்சியை எதிர்த்து நிற்பார் என்று தேர்வு செய்து தேர்ந்தெடுப்பது தான் வேட்பாளர் கடமை.
ஊழல் பணம் வெற்றியைத் தராது என்ற புதிய உண்மையை இந்த இடைதேர்தல் உருவாக்கி திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும்.
மெரினாவில் ஏற்பட்ட விழிப்புணர்வு மாற்றம் ஆர் கே நகர் இடைத்தேர்தலிலும் எதிரொலிக்க வேண்டும்.