Latest News

கொரானா: கைது பற்றி என்ன சொல்லப் போகிறார் ஹீலர்பாஸ்கர்?

Share

ஹீலர் பாஸ்கர் பற்றி தெரிந்தவர்களுக்கு கொரானா வைரஸ் பற்றி புதிதாக அவர்  எதையும் சொல்லி விட வில்லை என்று தெரியும்.

பத்து வருடங்களாக சொல்லி வந்ததைத்தான் இப்போதும் சொல்வதாக அவர் சொல்கிறார். இதுவரை வந்த வைரஸ்களுக்கும் இப்போது வந்திருக்கும் வைரசுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பது அவரது கருத்து.

எந்த வைரஸ் வந்தாலும் நமது உடல் தற்காத்துக்  கொள்ளும் . எனவே உடலை தயார் நிலையில்  வைத்திருக்க வேண்டும். அதற்குத் தேவையான இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் அவர் கைதுக்கு அது  காரணம் அல்ல. மக்களை மிரட்டியதுதான் ஆளும் கட்சியை சீண்டியதுதான் குறிப்பாக அமைச்சர் விஜயபாஸ்கரை சீண்டியதுதான் காரணம் என்கிறார்கள்.

#டாக்டர்கள் வேண்டுமென்றே உண்மையை சொல்ல மறுக்கிறார்கள். இல்லுமிநாட்டிகள் என்ற உலகின் உயர்வகுப்பு செல்வந்த கூட்டம் ஒன்று சாதாரண மக்களையும் நாடுகளையும் அடக்கி ஆளுவதற்காக பல்வேறு  முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். அதில்  இதுவும் ஒன்று. தடுப்பு ஊசி தேவை அற்றது. ஏனென்றால் அது தடுப்பு  ஊசி என்று சொல்லவே முடியாது. வைரஸை உடலில் செலுத்துவதை எப்படி தடுப்பு  என்று சொல்ல முடியும்? காய்ச்சல் என்பது நோயே அல்ல. அது  நோயை குணப்படுத்த உடல் எடுக்கும் முயற்சி. பிரசவத்தை வீட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம். மருத்துவ மனை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. #

இவைதான் ஹீலர் பாஸ்கரின் சர்ச்சைக்குரிய கருத்துக்களில் சில.. இவை பெரும்பாலான மருத்துவர் களால் ஒப்புக் கொள்ளப் பட்டவை அல்ல. விவாதத்துக்கும் ஆராய்ச்சிக்கும் உரியவை.

ஆனால்  மக்கள் தொகையை பாதியாக குறைக்க போகிறார்கள். அதற்காகத்தான் இந்த முயற்சிகள்.உங்களை பிடித்துக் கொண்டு போய் கொல்லப் போகிறார்கள். இப்படி அவர் பேசியதுதான் அவர் ஆதரவாளர்களுக்கே பிடிக்க வில்லை. பாஸ்கர் கொஞ்சம்  அத்து மீறி விட்டார் என்ற கருத்துதான் அதிகம். .

உலகம் ஒப்புக் கொள்ளும் கருத்துக் களைத்தான் எல்லாரும் சொல்ல வேண்டும் என்பது நியாயம் அல்ல. உலகம் தட்டை  என்று உலகமே நம்பியிருந்தபோது இல்லை  உலகம் உருண்டை என்று  சொன்ன கலிலியோவை அப்போது உலகம் ஏற்றுக் கொள்ள வில்லை. பின்னால் கலிலியோ சொன்னதுதான் உண்மையாயிற்றே தவிர அப்போது உலகம் நம்பியிருந்தது அல்ல.

ஆனால் பாஸ்கர் தனது மொழியில்  கவனமாக இருந்திருக்க வேண்டும். எவரையும் அவமதிக்கவோ ஒருமையில் அழைக்கவோ அவருக்கு உரிமை இல்லை. அதுதான் அவரை இப்போது சிக்கலில்  கொண்டு விட்டிருக்கிறது. எதையும் அறிவார்ந்த  முறையில் சொன்னால்  இப்போதும் உலகம் கேட்க காத்திருக்கிறது. இன்று அதிகாரத்தில் இருப்போர்  வேண்டுமானால் கேட்காமல் இருக்கலாம். நாளை ?

உலகம் முழுவதும் பாஸ்கருக்கு அபிமானிகள் இருக்கிறார்கள். அவர்களை  பாஸ்கர் கைவிட்டு விடக் கூடாது.அவர்களுக்காகவாவது குற்றம் இழைக்காமல் தனது கருத்துக்களை சொல்வது எப்படி என்பதை  இனிமேலாவது  அவர் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

அதுவே அவருடைய அபிமானிகளின் விருப்பம்.

விடை தேட வேண்டிய  கேள்வி?

இதுவரை பல ஆண்டுகளாக மருத்துவ துறையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பாஸ்கர் சொல்லி வந்திருக்கிறார். அவை லட்சக் கணக்கான மக்களின் கவனத்திற்கு சென்று பலரின் பாராட்டுக்களையும் சிலரின்  விமர்சனதையும் பெற்றிருக்கிறது. ஏன்  இதுவரை அரசு அவரிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை.? நடவடிக்கையும் எடுக்க வில்லை? 

This website uses cookies.