எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் , தினகரன் . திவாகரன் என்று வெளிப்படையாக நான்கு பிரிவுகளும் எப்போது வேண்டுமானாலும் மாற தயாராக இருக்கும் ஐந்தாவது பிரிவும் அதிமுக அரசை என்ன செய்ய போகிறார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
யாரும் ஆட்சியை கவிழ்க்க தயாராக இல்லை. நான்காண்டு காலமும் ஒட்டி விடுவதில்தான் குறியாக இருக்கிறார்கள். ஒபீஎஸ் கூட இன்று எங்களால் பழனிசாமி கவிழாது என்கிறார்.
எந்த குற்ற உணர்வும் இல்லாமல் தமிழக அரசியலை குழப்பத்தில் ஆழ்த்தி பதவி சுகம் கண்டு வருகிறார்கள்.
பா ஜ க அரசை குற்றம் சொல்ல யாருமே தயாராக இல்லை. பயம். மாநில உரிமைகள் எப்படி பாதுகாக்கப் படும்?
பொதுசெயலாளர் சசிகலா துணை பொது செயலாளர் தினகரன் என்று அவிடவிட்டு தாக்கல் செய்து விட்டு இருவரையும் விலக்கி வைக்கிறோம் என்கிறார்கள்.
ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்லி எல்லாரையும் குழப்பத்தில் ஆழ்த்து கிறார்கள்.
தலைமை என்ற ஒன்று இல்லாமலே ஒரு கட்சி இயங்க முடியும் என்று அ தி மு க நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
பல குழுக்களை வைத்துக் கொண்டே ஒரு ஆட்சியை நடத்த முடியும் என்று பழனிசாமி நிரூபித்துள்ளார்.
நான்காண்டுகளும் இப்படித்தான் நகரும் என்பது சகிக்க முடியாத கொடுமை.
இந்த குழப்ப நிலை ஒரு முடிவுக்கு கொண்டுவரப் பட வேண்டும்.
தேர்தல் ஒன்றே இந்த குழப்பத்தை தீர்க்கும்.
வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகத்தில் இருக்கும் தற்போதைய உறுப்பினர்கள் தேர்தல் கொண்டு வர தயாராக இருப்பார்களா?
இவர்களை மிரட்டி காலூன்ற நினைக்கும் பா ஜ க குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பிறகு ஆட்சியை கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டுவந்து தங்கள் மேற்பார்வையில் ஒரு ஆறு மாதம் ஆட்சி நடத்தி இவர்களோடு கூட்டணி வைத்து தேர்தலை கொண்டு வந்தால்தான் உண்டு என்ற நிலைதான் இப்போது.
பா ஜ க வின் ஆட்சி வேட்டை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்.
பார்க்கலாம். இடையில் ஏதாவது நடக்கலாம் அல்லவா ?
This website uses cookies.