நீதிமன்ற விசாரணை அறை முன்பு கோஷம் எழுப்பிய வழக்கில் அமைக்கப் பட்ட ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தீர்ப்பு ஒரு வக்கீலை மூன்று ஆண்டுகளுக்கு தொழில் செய்ய விடாமலும் இரண்டு வக்கீல்களை நிரந்தரமாக தொழில் செய்ய முடியாமலும் செய்திருக்கிறது.
இப்போது இந்த நடவடிக்கையை எதிர்த்து வக்கீல்கள் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். The remedy is worse than than disease.
இப்போது ஒழுங்கு நடவடிக்கை குழு அளித்திருக்கும் தண்டனை இந்த வகையை சேர்ந்ததுதான்.
இப்போதுதான் வக்கீல்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க துவங்கி இருக்கிறார்கள்.
இப்போதே இவ்வளவு கடுமை காட்ட வேண்டுமா?
நீண்ட நாட்களாக தூங்கி வழிந்த பார் கவுன்சில் இப்போது திடீரென்று விழித்துக் கொண்டு மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டுமா?
முதலில் ஒரு ஆண்டு இரண்டாவது குற்றத்துக்கு இரண்டு ஆண்டுகள் மூன்றாவது முறையும் குற்றம் இழைத்தால் மூன்று ஆண்டுகள் நான்காவது முறை என்றால் நிரந்தர தடை என்று ஏதாவது ஒரு முறையில் தண்டணை பற்றிய தெளிந்த வழிமுறை இருக்க வேண்டும்.
வழக்கறிஞர்கள் சமுதாயத்தின் பிரச்னைகளை தீர்க்க உதவுபவர்கள். முதலில் அவர்களின் பிரச்னையை அவர்களே தீர்த்துக் கொள்ளட்டும்.