Latest News

அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம் இருக்கலாமா?

Share

ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டு மரணமடைந்ததால் தண்டனை  காலத்தை சிறையில் கழிக்க வாய்ப்பில்லாமல் போனவர்.   ஆனால் அவருக்கு விதிக்கப்  பட்ட நூறு கோடி ரூபாய் அபராதத்தையும் அவரது சொத்துக்களில் இருந்து அரசு வசூலிக்கும்.

அவருக்குத் துணையாக இருந்தததற்காகத்தான் சசிகலாவும் இளவரசியும் ,சுதாகரனும் சிறையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு தலா பத்து கோடி அபராதம்.

உச்சநீதி மன்ற தீர்ப்பு  அனைவரையும் கட்டுப்படுத்தும்.   குறிப்பாக அரசைக் கட்டுப படுத்தும்.   இந்நிலையில் அவரது பிறந்த நாளை அரசு செலவில் கொண்டாடலாமா?

இதைத்தான் சட்ட மன்ற எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின் சுட்டிக்  காட்டி ஆட்சேபித் திருக்கிறார்.

அதிமுக வினர் தங்கள் கட்சி நிகழ்ச்சியிலோ வீட்டு  நிகழச்சியிலோ ஜெயலலிதா படத்தை பயன்படுத்துவது அவர்கள் விருப்பம் உரிமை.   அதை யாரும் கேள்வி கேட்க முடியாது.

ஓர் குற்றவாளியின் படத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் மக்களே நம்பாதீர்கள் என்று வேண்டுமானால் பிரச்சாரம் செய்யலாமே தவிர படத்தை பயன்படுத்துவதை ஆட்சேபிக்க முடியாது.

ஆனால் அரசு விழா  அப்படியல்ல.      அதேநேரம் ஜெயலலிதா என்பவர் முன்னாள் முதல்வர் என்பது வரலாற்று உண்மை.    அதை மறைக்கவோ மறக்கவோ  முடியாது.

நீதிமன்றம் சொல்லித்தான் ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வு வர வேண்டும் என்பதே தவறு.

ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி இனி  எப்படித்தான் அரசியல் செய்வார்கள் என்பதை நினைத்தால் மிகவும் பயமாக இருக்கிறது.

ஒருபக்கம் ஓ பன்னீர்செல்வம் நீதி கேட்டு பயணமாம்.      யாரிடமிருந்து என்பதை அவர் விளக்க வில்லை.       மறுபக்கம் தீபா ‘ எம்ஜியார் அம்மா தீபா பேரவை ஆரம்பித்து ஜெயலலிதா வழியில் அரசியல் பயணம் தொடங்கி விட்டார்.    முதல் நாளே தன் கார் டிரைவரை தலைவராக நியமித்த தற்கு எதிர்ப்பு தெரிவித்து தீபா பேரவையினர் ஆர்பாட்டம் செய்திருக்கிறார்கள்  .   அவர் பொறுப்புகள் வாங்கித் தருவதாக பலரிடம் வசூல் செய்திருக்கிறார்.    முதல் கோணல் முற்றும்  கோணலாகும் வாய்ப்புகள் நிறையவே அதிகம்.

ஜெயலலிதா தன் ஆட்சிக்  காலத்தில் நல்ல பல திட்டங்களை நிறைவேற்றினார் என்பதை மறுக்க முடியாது.   அதை  கொண்டாடும் சாக்கில் அவரது தொண்டர்கள் அபிமானிகள்  தங்கள் கைகளில் அரசு இருக்கிறது என்பதற்காக அவரைக் கொண்டாடி அவரது  பேரைச்சொல்லி  மக்களிக்க வாக்குகளை வாங்கி விட முடியும் என்ற நிலை இனி வராது.                    .

ஜெயலலிதா பெயரை சொல்லி  இனி மக்களிடம்  வாக்கு வாங்கும் எண்ணமே இனி யாருக்கும் இருக்காது.

இருக்கக்  கூடாது.

 

This website uses cookies.