122 வாக்குகள் பெற்று எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார் என்றார் சபாநாயகர்.
எண்ணிக்கை இடிக்கிறதே?
அ இ அ தி முக வாக்குகள் 134 – ஜெயலலிதா 1 = 133
ஓ பி எஸ் அணி வாக்குகள் 11
கோவை வடக்கு அருண்குமார் 1
சபாநாயகர் 1
சிகிச்சை பெற்றுவரும் ஆறுமுகம் 1
கூடுதல் 14
133-14=119 ஆக பெற்று இருக்க வேண்டிய அ தி மு க வின் பழனிச்சாமியின் அணி 122 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவித்தார் சபாநாயகர்.
கூடுதல் வாக்குகள் மூன்று யார் போட்டது.?
காங்கிரஸ் கட்சி தி மு க வோடு வெளியேறிவிட்டது என்றால் கூடுதல் மூன்று ஒட்டு யார் போட்டது. ?
இரண்டாவது முறை நம்பிக்கை வாக்கு கோரியது செல்லாது என்றும் அதன் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பும் செல்லாது என்றும் நீதிமன்றத்தை நாட தி மு க தயாராகி வருகிறது.
தற்காலிக பொதுசெயலாளர் என்ற பதவியே அ தி மு க வில் இல்லை என்றும் அப்படி தற்காலிக பொதுசெயலாளர் ஆக நியமிக்கப் பட்ட சசிகலாவின் நிமனமும் செல்லாது என்றும் கொடுக்கப் பட்ட மனுவை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.
இடைப்பட்ட காலத்தில் , சட்ட மன்றத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக அறிக்கை தரக் கோரி சட்டசபை செயலாளரை ஆளுநர் கேட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில் சொல்லப் பட்ட விபரங்களை வைத்து மத்திய அரசு மாநில அரசை கலைக்கவும் வாய்ப்பிருக்கிறது .
இந்தக் குழப்பங்களின் சூத்திரதாரி மத்திய அரசு . தனது தோல்வியை ஒப்புக்கொள்ளமாட்டார்கள் . வாய்ப்புக்காக காத்திருந்து கலைப்பார்கள்.
இந்தக் குழப்பங்கள் எப்போது ஓய்வது? எப்போது இவர்கள் ஆட்சி நடத்த துவங்குவார்கள் என்று
மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
This website uses cookies.