கதிராமங்கலத்தில் ஒ என் ஜி சி க்கு எதிராக போராடிய பொது மக்கள் ஒன்பது பேரை சிறையில் அடைத்து ஜாமீனில் வர முடியாத அளவு கெடுபிடி செய்கிறது அ தி மு க அரசு.
இத்தனைக்கும் எங்களை மீறி நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வராது என்ற உறுதியை மாநில அரசு கொடுத்திருக்கிறது.
அதேபோல் இந்தியன் ஆயில் கார்பொரேஷன் முன்பு போராடியதற்காக மே பதினேழு இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப் பட்டுள்ளார்.
இப்போது அதே நோக்கத்தோடு ஆயில் நிறுவனங்களுக்கு எதிராக போராடிய சேலம் மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டிருக்கிறார்.
அவர் மீது ஆறு வழக்குகள் உள்ளன என்று முதல்வர் சட்ட மன்றத்தில் காரணம் கூறுகிறார்.
எல்லா வழக்குகளும் அரசியல் வழக்குகள் தானே. எல்லா அரசியல் கட்சிகளும் அரசுகளை எதிர்த்து போராடுகின்றன. எல்லார் மீதும் குண்டர் சட்டம் பாயுமா?
கொலை கொள்ளை, வழிப்பறி , என்று குற்றம் புரியும் கிரிமினல் குற்றவாளிகள் மீது பல வழக்குகள் இருந்தால் அவர்களை குண்டர் சட்டத்தில் போட்டு ஜாமீனில் வர முடியாமல் செய்வது வழக்கம்.
இப்படி கிரிமினல்கள் மீது பாய்ச்ச வேண்டிய குண்டர் சட்டத்தை அரசியல் போராளிகள் மீது போட்டால் அவர்களை அரசியல் ரீதியாக போராடுவதில் இருந்து தடுக்க அரசு முயற்சிக்கிறது என்றுதான் பொருள்.
அதுவும் மத்திய அரசுக்கு எதிராக போராடினால் மாநில அரசு குண்டர் சட்டத்தில் போடுகிறது என்றால் மத்திய அரசு கொடுக்கும் அழுத்தத்திற்கு மாநில அரசு பணிகிறது என்றுதானே பொருள்.
மத்திய அரசின் கைப்பாவையாக மாறிவிட்ட அ தி மு க அரசு எப்படி மாநில உரிமைகளை பாதுகாக்கும்?
கொடுமை என்னவென்றால் பா ஜ க அரசு தரும் அழுத்தம் காரணமாகவே இப்படி செய்கிறோம் என்று அ தி மு க அரசு ஒருபோதும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை.
இன்னும் என்னவெல்லாம் செய்யும் காவி?
This website uses cookies.