Home Latest News உச்சநீதி மன்றத்தை யார் கேட்பது? தீர்ப்பு தர எட்டு மாதம் தேவையா?

உச்சநீதி மன்றத்தை யார் கேட்பது? தீர்ப்பு தர எட்டு மாதம் தேவையா?

உச்சநீதி மன்றத்தை யார் கேட்பது?  தீர்ப்பு தர எட்டு மாதம் தேவையா?

தமிழகத்தில் நிலவும் இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் உச்ச நீதி மன்றம்.

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு செய்திருந்த மேன் முறையீட்டில் வாதங்கள் முடிந்து தீர்ப்புக்கு ஒதுக்கி எட்டு மாதங்களாகி விட்டது.

தீர்ப்பு முன்பே வந்திருந்தால் தமிழக அரசியல் நிலவரம் முற்றிலும் மாறியிருக்கும்.

யார் கண்டது. ?    ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வின் போக்கையே அது மாற்றியிருக்க கூடும்.

கிழமை நீதிமன்றங்களுக்கு அறிவுரை சொல்லும் உச்ச நீதி மன்றத்துக்கு யார் அறிவுரை சொல்வது?

வழக்கு நடத்த பதினெட்டு ஆண்டுகள் இழுத்தடித்தார் ஜெயலலிதா.      குற்றவாளி தீர்ப்பு வந்து மேன்முறையீடு செய்து  அதை மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு சொல்ல உத்தரவிட உச்ச நீதி மன்றத்துக்கு முடிந்தது.

தன்னிடம் வந்த வழக்கில் மட்டும் தீர்ப்பு சொல்ல எட்டு மாதம் எடுத்துகொள்கிறது.

தீர்ப்பு முன்பே வந்திருந்தால் இன்று எழுந்திருக்கும் சசிகலா-ஓ பி எஸ் உடைசலே வந்திருக்காது.

உச்ச நீதி மன்றம் முதலில் இந்த பிரச்னைக்கு முடிவு கட்டட்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here