எழுவர் விடுதலையில் மீண்டும் வஞ்சிக்கும் மத்திய அரசும் தூங்கும் மாநில அரசும்?!

ltte-7-murugan-nalini
ltte-7-murugan-nalini

எழுவரையும் விடுதலை செய்யலாம் என்ற மாநில அரசின் 09/09/2018 தேதிய அமைச்சரவை தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதால் நீதி மன்றமே தலையிட்டு அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்றி விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி தொடர்ந்த வழக்கில் மீண்டும் மத்திய அரசு பல்டி அடித்து இது சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஒரு கருத்தை சொல்லி ஆளுநர் என்ன முடிவை எடுக்க வேண்டும் என்று வழி காட்டி இருக்கிறது.

கண்டும் காணாதது போல் ஆளுநருக்கு நாங்கள் அழுத்தம் கொடுக்க முடித்து என்று தூங்கிக் கொண்டிருக்கிறது அதிமுக மாநில அரசு. டில்லி எஜமானவர்களை அனுசரித்துப்போக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.

அரசியல் சட்ட பிரிவு 161ன் படி மாநில அமைச்சரவை எடுத்த முடிவை அமுல்படுத்த மறுக்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதுதான் கேள்வி!

முன்பு கலைஞர் நளினியின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க பிரிவு 161 கீழ் செய்த முடிவை அன்றைய ஆளுநர் பாத்திமா பீவி அமுல்படுத் தினாரே  ஏன் இப்போது முடியாது?

எழுவர் விடுதலையை தாமதப்படுத்தும் ஒவ்வொரு நாளும் மத்திய பாஜக அரசின் மீதான தமிழர்களின் கோபம் குறையவே குறையாது.

அதன் தாக்கம் தமிழகத்தை ஆளும் அதிமுகவின் மீதும் இருக்கவே செய்யும்.