2000 ஆண்டில் செல்வி ஜெயலலிதாவுக்கு பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் சிறை தண்டனை வழங்கப் பட்டது.
அதை எதிர்த்து தர்மபுரியில் அதிமுகவினர் வேளாண் பல்கலைக்கு சொந்தமான பேருந்தை எரித்தனர். அப்போது அதில் இருந்த மாணவிகள் மூன்று பேர் ஹேமலதா காயத்ரி கோகிலவாணி தீயில் கருகி மாண்டனர்.
அவர்களுக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த மரண தண்டனை உச்ச நீதி மன்றத்தில் ஆயுள் தண்டனை ஆக குறைக்கப் பட்டது.
இப்போது அவர்களின் எஞ்சிய தண்டனை காலம் முடியும் முன்பே தமிழக அரசு எம் ஜி ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போர்க்கு விடுதலை அளித்துள்ளது. அதற்கு முதலில் அனுமதி மறுத்த ஆளுனர் பின்னர் என்ன நடந்ததோ அனுமதி அளித்தவுடன் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப் பட்டிருக்கிறார்கள்.
இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
இதே கடமை உணர்ச்சியை ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் ஏழு பேரின் விடுதலையில் தமிழக அரசு காட்டாதது ஏன்?
இன்று கூட வேல்முருகன் ஓர் சைக்கிள் பேரணி ஒன்று நடத்தி இருகிறார்.
உச்ச நீதிமன்றம் ஆளுநர் முடிவு எடுக்கலாம் என்று உத்தரவிட்ட பின்னும் ஏன் தாமதிக்க வேண்டும்.?
அதுவும் மாநில அரசு பரிந்துரையை அரசியல் சட்ட பிரிவு 161 ன் கீழ் ஆளுநர் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.
இதற்கிடையில் மத்திய அரசு ஆளுநர் அனுப்பிய ஏழு பேர் விடுதலை பற்றிய கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமலேயே அனுமதி மறுத்து விட்டதாக தகவல் வருகிறது. எது உண்மை.?
ஏழு பேர் விடுதலை ஒரு புறம். மற்றொரு புறம் மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு ஆளுநர் மூலமாக தலையிட முடியுமா என்ற கேள்வி .
விடை விரைவில் தெரிந்தே ஆக வேண்டும்.!!!