ஊழல் செய்வதற்கும் எல்லை இல்லை என்றாகிவிட்டது.
படித்தவர்கள் கூட நீதிமன்றத்தை மதிப்பதில்லை என்பது மட்டுமல்ல கொஞ்சம் கூட பயமே இல்லாமல் நீதிமன்றத்தில் போலி அறிக்கை தாக்கல் செய்த தேர்வாணைய அதிகாரி கைது செய்யப்பட்டார்.
தமிழக விரல் ரேகை பிரிவு துணை ஆய்வாளர் பணிக்காக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தியது. அதில் கலந்து கொண்ட ஒருவர் கணிதம் தொடர்பான கேள்விக்கு மதிப்பெண் வழங்கவில்லை என்பதற்காக வழக்கு தொடர்கிறார். பதில் தவறு என்பது தேர்வாணையத்தின் நிலை.
நீதிமன்றத்தில் ஐஐடி யில் பணியாற்றும் டி மூர்த்தி என்பவரிடம் பதில் தவறு என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதின் அடிப்படையில் வழக்கை தள்ளுபடி செய்கிறது நீதிமன்றம்.
மேல்முறையீட்டில் டி மூர்த்தி என்பவர் ஐஐடி யில் பணியாற்றவே இல்லை என்று வாதிடப்பட்டது. விசாரணையில் தேர்வாணையத்தின் ஆலோசகர் ஜிவி குமார் என்பவர் டி மூர்த்தி என்பவருடன் சேர்ந்து கொண்டு தேர்வானையத்தை ஏமாற்றியது தெரியவந்தது. இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டு குமார் கைதாகி மூர்த்தி தேடப்பட்டு வருகிறார்.
படித்தவர்கள் செய்த வேலையை பார்த்தீர்களா??!! இப்படிப்பட்டவர்கள் செய்யும் மோசடிகளால் எத்தனை தகுதி பெற்றவர்கள் வாய்ப்புகளை இழந்தார்களோ ?
மிகக் கடுமையான தண்டனை மட்டுமே இத்தகைய குற்றங்களை தடுக்கும்.