குஜராத்தில் இருந்து ராஜ்ய சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அமித்ஷாவும் ஸ்மிருதி இரானியும்.
இருவரும் இப்போது மக்களவைக்கு ஒரே சமயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்கள். இருவரது இடங்களும் ஒரே நேரத்தில் ராஜ்ய சபாவில் காலியாகின்றன.
பாஜகவுக்கு 100 சட்டமன்ற உறுப்பினர்களும் காங்கிரசுக்கு 71 சட்டமன்ற உறுப்பினர்களும் இருப்பதால் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் பாஜக சார்பில் ஒருவரும் காங்கிரஸ் சார்பில் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .
இங்கேதான் பாஜகவின் சதி அரங்கேறுகிறது. இரண்டு உறுப்பினர் காலியாக உள்ள இடங்களுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்தினால் இரண்டு இடங்களிலும் பாஜக வென்று இரண்டு பேர் ராஜ்ய சபா செல்வார்கள். காங்கிரசுக்கு வாய்ப்பு பறி போகும்.
பாஜக திட்டமிடலாம். அதற்கு தேர்தல் கமிஷன் துணை போகலாமா? இதுதான் கேள்வி!
தேர்தல் கமிஷன் பாஜக வின் சதிக்கு துணை போகிற வகையில் ஜூன் 15 ல் இரண்டு காலியிடங்களையும் தனியான இடங்கள் போல ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி தேர்தலை தனித்தனியாக நடத்த முடியும்.
இந்த அறிவிப்பை எதிர்த்து காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் பரேஷ்பாய் தனனி என்பவர் உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறார்.
அங்கேயும் தனது நிலைப்பாடு சரியே என்று தேர்தல் கமிஷன் வாதிடுகிறது. உச்ச நீதிமன்றம் என்ன சொல்லப்போகிறது என்று பார்க்கலாம். விடுமுறை காலம் முடிந்து இது பற்றி இறுதி உத்தரவு கிடைக்கலாம்.
அதிகாரம் கிடைத்தால் எப்படியெல்லாம் பாஜக விதிமுறைகளை சின்னா பின்னப்படுத்தும் என்பதற்கு இது ஒரு சிறிய சான்று.
This website uses cookies.