மரண தண்டனை கூடாது என்று வாதிடுவோர் கூட இவர்கள் நாகரீக சமுதாயக்தில் வாழத் தகுதியற்றவர்கள் என்று கூற தயங்காத அளவு கொடூரமான முறையில் பாலியல் குற்றம் இழைத்த நிர்பயா குற்றவாளிகள் நால்வர் கடைசியில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தூக்கில் இடப்பட்டனர்.
மனித குலத்தின் மிகப் பழைமையான தொழில் பாலியல்.
உலகின் எந்த நாட்டாலும் அறவே ஒழிக்க முடியாத தொழில்.
இந்தியாவில் கூட மும்பையிலும் கோல்கத்தாவிலும் சட்ட பூர்வமாகவே அனுமதிக்கப் பட்டு மருத்துவக் கண்காணிப்பில் நடைபெறும் தொழில்.
ஆனால் மனிதர்கள் சட்டத்தை மீறியே வழக்கப் பட்டு விட்டார்கள். சட்டம் அனுமதிக்கும் வழிகளை புறந்தள்ளி குற்றம் செய்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற அச்சமின்மை குற்றம் செய்ய தூண்டுகிறது.
அதனால்தான் மனிதன் பாலியல் ரீதியாக கொடூரமாக நடந்துகொண்டு கொலை செய்யும் அளவு துணிந்து விடுகிறான்.
கொலைக்கு மரண தண்டனை இருந்தும் கொலைகள் குறைய வில்லையே?
பெரும்பாலான கொலைகளுக்கு ஆயுள் தண்டனை என்ற பெயரில் ஏழெட்டு ஆண்டுகள் சிறையில் கழித்தால் போதும் என்ற நிலையில் விடுதலையாகி மீண்டும் பயமின்றி வன்முறையில் இறங்கலாம் என்ற நிலைதான் சட்டத்தை வலுவிழக்க செய்து வருகிறது.
இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனை நிறைவேற்றம் என்பது கொஞ்சமாவது அச்சத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
சட்டத்தின் மீதும் நீதி மன்றங்களின் மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தக்க வைக்கும் தூக்கு இது.
This website uses cookies.