அமைச்சர் வேலுமணி மீது பலவிதமான குற்றச்சாட்டுகளை அறப்போர் இயக்கம் சுமத்தியது.
அதில் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு டெண்டர் விதி முறைகளை மீறி ஒப்பந்தங்களை கொடுத்ததன் மூலம் பல கோடி ரூபாய்களை அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாக அமைச்சர் மீது குற்றம் சுமத்தி இருந்தது.
அதற்காக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை கோரியும் ஒரு ரிட் மனுவும் தாக்கல் செய்திருந்தது அந்த இயக்கம்.
இந்நிலையில் தன் மீது குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது எனவும் தடை விதிக்கவும் தனக்கு ஏற்பட்ட மான நட்டத்துக்கு ஒரு கோடி ரூபாய் ஈடு கேட்டும் அமைச்சர் வேலுமணி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அதன் விசாரணையில் இடைக்கால உத்தரவு எதையும் கொடுக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அதனால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை மக்கள் மன்றத்தில் அந்த அமைப்பு கொண்டு செல்ல தடை ஏதும் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருகிறது.
வழக்கின் இறுதி விசாரணையில் தான் அமைச்சருக்கு ஏதாவது நிவாரணம் கிடைக்குமா என்பது தெரியும். அது இன்னும் பல வருடங்கள் ஆகும்.
மான் நட்ட வழக்குகளில் உண்மையை அல்லது அதற்கு முகாந்திரம் உள்ளதை , ஒரு சட்ட அமைப்பு விசாரிக்க கோருவதை என்று பல அம்சங்கள் இருந்தால் அவைகள் குற்றமாக கருதப்படாது என்பது சட்டம்.
ஆக அமைச்சர் தேர்ந்தெடுத்த மிரட்டல் வழிமுறை அவருக்கு கைகொடுக்கவில்லை.
விசாரணைக்கு பல வருடங்கள் ஆகும்.
வழக்கு போடாமலாவது இருந்திருக்கலாம்.