சட்டம்

பாண்டியராஜனின் உளறல்?! கையெழுத்து இயக்கத்தை தடை செய்ய முடியுமா?

Share

குடிஉரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு கோடி கையெழுத்து வாங்க இயக்கம் ஒரு வாரம் நடத்துகின்றனர்.

சட்டமான பிறகும் அதை எதிர்த்து இயக்கம் நடத்துவது ஒன்றும் குற்றமல்ல.  அதுவும் ஒரு ஜனநாயகத்தில் வேறு எப்படித்தான் எதிர்ப்பை பதிவு செய்வது?

சட்டம் கட்டுப் படுத்தும் என்றாலும் அதை திரும்ப பெற எதிர்கட்சிகள் வலியுறுத்துமானால் அதற்கு மக்கள் ஆதரவு இருக்கும் பட்சத்தில் ஆளும் கட்சியே மறுபரிசீலனை செய்யலாம் அல்லவா?

 கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச அரசுகள்  குடிஉரிமை திருத்த  சட்டத்துக்கு எதிராக அமைச்சரவையில்  தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றன. அமுல் படுத்த மாட்டோம் என்கிறார்கள். எல்லாரையும் டிஸ்மிஸ் செய்து விடுவீர்களா? 

அமைச்சர் பாண்டியராஜன் அமைச்சராக இருக்கிறார். அவருக்கு ஜனநாயக உரிமைகள் பற்றி தெரியாது என்று சொல்ல முடியாது.

தெரிந்தும் கையெழுத்து இயக்கத்தை மத்திய அரசு எப்படி அனுமதிக்கிறது என்று கேட்பாரேயானால் அவர் சர்வாதிகாரத்தை ஆதரிக்க ஆரம்பித்து விட்டார் என்றுதான் பொருள். அதிமுகவை முழுவதும்  மண்டியிட வைக்க முயல்கிறார் பாண்டியராஜன்.

மௌனமாக இருந்தால் அதற்கு இபிஎஸ் -ஒபிஎஸ்  பச்சை கொடி காட்டி விட்டார்கள் என்றுதான் பொருள்.

This website uses cookies.