அலோக் வர்மாவின் கட்டாய விடுப்பை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்து மீண்டும் பணியில் அமர்த்தியது.
அவரும் பணியில் சேர்ந்து அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.
ஆனால் பிரதமர் உச்ச நீதிமன்ற நீதிபதி எதிர்க்கட்சி தலைவர் மூன்று பேரும் சேர்ந்து முடிவெடுக்கலாம் என்று கூறியதால் பிரதமர் நீதிபதி சிக்ரி எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகிய மூன்று பேரில் பிரதமரும் நீதிபதியும் சேர்ந்து மீண்டும் அலோக் வர்மாவை வேறு இடத்துக்கு தூக்கி அடித்தார்கள். எதிர்கட்சி தலைவரின் ஆட்சேபனைகளை கேட்கவில்லை. அதுவாவது பரவாயில்லை. உத்தரவு போடும் முன் பாதிக்கப்பட்ட அலோக் வர்மாவிடம் விளக்கம் கூட கேட்கவில்லை. அது இயற்கை நீதிக்கு முரண் இல்லையா? முரண் என்று நீதிபதிக்கு தெரியாதா?
ஆக தன்னிடம் இணக்கமாக இல்லையென்றால் அவர்களை பழிவாங்க பிரதமர் எந்த எல்லைக்கும் செல்வார்.
நல்ல பிரதமர் . நல்ல சிபிஐ. விளங்கி விடும் நீதி??!!