ராகுல் கொக்கைன் போதை மருந்து எடுப்பது உண்மையா? சு. சாமிக்கு என்ன தன்டனை

swamy-rahul-gandhi
swamy-rahul-gandhi

சுப்பிரமணிய சாமி அதிரடியாக பலர் மீது அவதூறு குற்றம் சாட்டுவதை வழக்கமாகவே வைதிருக்கிறார் .

சமீபத்தில் ராகுல் காந்தி கொக்கைன் என்ற போதை மருந்து உட்கொள்வதாக கூறியிருந்தார். அதற்காக அவர் மீது வழக்கு பதியப் பட்டு விசாரணை நடந்து  வருகிறது. இது எப்போது முடியும் என தெரியவில்லை.

ஆனால் இந்த குற்றச்சாட்டு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம்  இந்தக்குற்றசாட்டைக் கூறியவர் யார் என்பதும்.

சேற்றை வாரி இறைப்பது மட்டுமே ஒரு ஆயுதமாக இந்த நாட்டில் இருந்து வருகிறது. விசாரணை முடிந்து நிரபராதி என்று தீர்ப்பு வந்தாலும் அதற்குள் அவர் மீது கெட்ட பெயர் பரவி எதிர்காலத்தை நாசமாக்கி விடும். எனவே பொய் குற்றச்சாட்டை விட ஒரு மோசமான ஆயுதம் இருக்க முடியாது.

ஒன்று ராகுல் கொக்கைன் எடுப்பவராக இருந்தால் அவர் அரசியலில் இருக்க தகுதி இல்லாதவர். அல்லது நிரபராதியாக இருந்தால் சுப்பிரமணியசாமி பொய் குற்றச்சாட்டு சுமத்தியதற்கு தண்டனை அனுபவிக்க வேண்டும்.

அதுவும் விரைவில் நடைபெற வேண்டும். கால தாமதம் ஆனால் குற்றவாளிகளின் எண்ணம் ஈடேறி விடும். அதற்குப் பிறகு தீர்ப்பு வந்தால் என்ன வராவிட்டால் என்ன?

காங்கிரஸ் இதில் தீவிரம் காட்டி உண்மையை வெளிக் கொணர தவறினால் சுப்பிரமணிய சாமி கூறுவது போல் ராகுல் dope test என்கிற போதை மருந்து  பரிசோதனையில் தோற்பார் என்பது உறுதியாகிவிடும்.