மோடியும் அமித் ஷாவும் தேர்தல் நேரத்தில் பேசிய பேச்சுக்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் முன்பு மனுக்கள் இருந்தன.
அவற்றில் தலைமை கமிஷனர் சுனில் அரோராவும் சுஷில் சந்திராவும் நடவடிக்கை தேவை இல்லை என்றும் அசோக் லவசா மட்டும் மாறுபட்டும் உத்தரவிட்டு இருந்தனர்.
அதில் லவசா வின் குறிப்பு அல்லது கருத்து என்ன என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டதற்கு அதை தரக்கூடாத தகவல் என்றும் அதற்கான காரணம் கொடுத்தால் ஒருவரது உயிருக்கு ஆபத்து அல்லது நபர் பாதுகாப்பின்மை ஏற்படலாம் என்றும் பதில் கொடுத்துள்ளது தேர்தல் கமிஷன்.
அப்படி என்ன லவசா குறிப்பு எழுதினார் என்பதை உச்ச நீதிமன்றம் சென்றுதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும் தேர்தல் கமிஷனர் உயிருக்கே ஆபத்து என்னும் அளவில்தான் அங்கே நிலைமை இருக்கிறது என்றால் தேர்தல் ஆணையம் எப்படி நடுநிலையாக இயங்கும் என்ற சந்தேகம் எழுகிறது அல்லவா?
லவசாவின் குறிப்பு ஆவணமாக இருக்கும் எனவும் ஆனால் ஆணையில் ஒரு பகுதியாக இருக்காது என்றும் தேர்தல் கமிஷன் வினோதமான உத்தரவை பிறப்பித்தது நினைவில் இருக்கலாம்.
எல்லாம் மேலே உள்ளவர்களுக்குத்தான் வெளிச்சம் !
This website uses cookies.