சட்டம்

மணிப்பூரில் கடுமை காட்டிய உச்சநீதி மன்றம் ஒபிஎஸ் விடயத்தில் மென்மை காட்டுகிறதா ?!

Share

மணிப்பூரில் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப் பட்ட ஷ்யாம் குமார் பாஜகவில் சேர்ந்து அமைச்சராகிறார்.

தகுதி நீக்கம் செய்ய கொடுக்கப் பட்ட மனுவை  சபாநாயகர் கிடப்பில்  போடுகிறார்  மூன்று ஆண்டுகளாக.  தமிழ்நாட்டில் ஓபிஎஸ் மற்றும் பத்து பேர் மீது இருக்கும் அதே நடவடிக்கை..விசாரணையில் சபாநாயகர் மூன்று மாதத் துக்குள் முடிவு எடுக்க உச்சநீதி மன்றம் உத்தரவிடுகிறது. அதற்குப் பிறகும் முடிவு எடுக்காததால் அமைச்சர் பதவியில்  இருந்து ஷ்யாம் குமாரை நீக்கி உத்தரவிட்டு இருக்கிறது உச்ச நீதி மன்றம்.

கட்சி தாவல் தடுப்பு சட்டத்தையே கேலிக்கூத்தாக்கி வருகிறார்கள் சபாநாயகர்கள். ஒன்று ஆளும்கட்சிக்கு  சாதகமாக முடிவெடுக்கிறார்கள். அல்லது  எந்த முடிவும் எடுக்காமல் காலம் கடத்துகிறார்கள்.

இவர்கள் முடிவு எடுப்பதற்குள் அமைச்சரவையில் ஆயுள் முடிந்து  விடும். ஒரு வழக்கில் சபாநாயகரின் அதிகாரத்தை சுயாதிகாரம் கொண்ட தீர்ப்பாயத்திடம் கொடுத்தால் என்ன என்றும் உச்சநீதி  மன்றம் கேட்டிருக்கிறது.

இன்று மத்திய பிரதேசத்தில் நடந்து வருவது ஜனநாயகப் படுகொலை. நிகழ்த்திக் கொண்டிருப்பது  பாஜக. கட்சி தாவல் தடை சட்டத்தை ஏமாற்ற ராஜினாமா  செய்து வருகிறார்கள். ராஜினாமாவின் முடிவில் பின்னால் கட்சி தாவல் இருக்கிறது.

குஜராத்தில் காங்கிரஸ் ஒரு பாராளுமன்ற மேலவை இடத்தை பெறக்கூடாது என்பதற்காக நான்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் ராஜினாமா செய்கிறார்கள். இதற்காக ஒரு உறுப்பினர்க்கு இருபது கோடி முதல் அறுபது கோடி வரை பேரம் பேசி இருக்கிறார்களாம். இப்படி கட்சி மாறுபவர்களை தெருவில்  நிறுத்தி செருப்பால் அடிக்க வேண்டும் என்று ஹர்டிக் பட்டேல் பேசியிருக்கிறார்.

உச்சநீதிமன்றம் தமிழ்நாடு சபாநாயகருக்கு  ஏன் காலக்கெடு எதுவும் விதிக்க வில்லை.?

 

 

 

This website uses cookies.