தமிழ்நாடு இளைஞர் ஒருவர் மராட்டிய மாநில நாக்பூர் பக்கத்தில் பணி செய்து வந்த நிலையில் கொறானா பாதிப்பில் சுமார் முப்பது பேருடன் கால்நடையாகவே தமிழகம் நோக்கி பயணித்தார்.
மராட்டிய அரசும் அவர்களின் போக்குவரத்துக்கு வசதி செய்து தர வில்லை. இடையில் தெலுங்கானா காவல் துறை அவர்களை தடுத்து மண்டபத்தில் தங்க வைத்தது .
அதில் ராஜேஷ் என்ற இளைஞர் உடல் நலம் பாதிக்கபட்டு சிகிச்சை பலன் இன்றி உயிர் நீத்திருக்கிறார்.
உயிரோடு இருக்கும்போது அவர்களை மண்டபத்தில் தங்க வைத்த காவல் துறை மாண்டபின் அவரது உடலை வாகனத்தில் அனுப்பி வைத்திருக்கிறது.
என்ன செய்வது.? உடலுக்கு இருக்கும் மரியாதை உயிருக்கு இல்லையே ?!
கொரானா பலி வாங்குவது போதாது என்று அதிகாரிகளின் அலட்சியமும் பலி வாங்குகிறதே ?!