ஆங்கிலேய ஆட்சிகால மனநிலையில் இருந்து நாம் வெளி வரவில்லையோ என தோன்றுகிறது.
வைகோ மீதான வழக்கில் நீதிபதி கேட்டதாக சொல்லப்படும் கேள்வி நீங்கள் பிரபாகரன் மீதான ஆதரவை நீங்கள் அதிகரிக்கும் விதத்தில் பேசினீர்களா என்பது.
பிரபாகரனை ஆதரித்து பிரச்சாரம் செய்வது தவறில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொன்ன பிறகும் இப்படி ஒரு தீர்ப்பு வர முடியும் என்பதை கற்பனை செய்யவே முடியவில்லை. பிரபாகரன் தீவிரவாதியல்ல அவர் ஒரு இனத்தின் விடுதலைப் போராளி என்னும் கருத்தில் உறுதியாக இருப்போர் கோடானு கோடி. எல்லாரையும் தண்டித்து விடமுடியுமா?
உச்சநீதி மன்ற தீர்ப்பிற்கு என்னதான் பொருள்.?
தவறான புரிதல்தான் இந்த தவறான தீர்ப்பிற்கு அடித்தளம் இட்டிருக்க வேண்டும்.
மேல்முறையீட்டில் இந்த தண்டனை உறுதியாக நிற்காது என்பதே நமது கணிப்பு.
தற்காலிகமாக சில சிரமங்களை வைகோவிற்கு இது அளிக்கலாம். அவைகள் நிரந்தரம் அல்ல.
மேன்முறையீட்டு நீதிமன்றம் நிச்சயம் தடை கொடுக்கும் என்றும் வைகோ ராஜ்ய சபைக்கு போவது தடை படாது என்றும் நம்புகிறோம்.
இதில் திமுகவிற்கு ஒரு நிரடலும் இல்லை. திமுக ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட வழக்கு என்பதால் அதில் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதோ வைகோ குற்றவாளி என்பதோ திமுகவின் நிலைப்பாடு அல்ல. அது காவல்துறையின் நிலைப்பாடு.நீதிமன்றம் அதுபற்றி தீர்ப்பு சொல்லும். அதில் நீதி நிச்சயம் வெல்லும். வைகோ புடம் போட்ட தங்கம் போல் வெளிவருவார்.
ஆயுதம் தாங்கி விடுதலைக்கு போராடிய சுபாஷ் சந்திர போஸ்
இந்திய போராளிகளின் பெருமிதம்.
பிரபாகரன் தமிழர்களின் குல சாமி !
தமிழ்ப்போராளிகளின் பெருமிதம்.!
அந்தப் பெருமையை தட்டிப் பறிக்க எவராலும் முடியாது!