என்ன ஆனது முகிலனுக்கு?
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூட்டின் போது கொல்லப்பட்ட 13 பேர் தொடர்பாக ஒரு ஆவணப் படத்தை முகிலன் என்பவர் பெப்ரவரி 15ம் தேதி வெளியிடுகிறார்.
அன்றைய தினமே அவர் எழும்பூர் ரெயில் நிலையத்தில் பயணமாக வேண்டியவர் மாயமாகிறார்.
அந்த ஆவணப்படத்தில் காவல்துறை திட்டமிட்டு மே மாதம் 22ம் தேதி 2018 ல் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது என்று குற்றம் சாட்டி இருந்ததுதான் இப்போது பிரச்னை ஆகி இருக்கிறது.
ரெயில்வே காவல் துறை வழக்கு பதிவு செய்தும் நகர காவல் துறை ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பதால் இப்போது சிபிசிஐடி விசாரிக்க காவல் துறை தலைவர் உத்தரவிட்டிருக்கிறார்.
அதுவும் பலரும் முகிலனின் கதி குறித்து கவலை தெரிவித்த பின் இந்த விசாரணை. காவல் துறை மீதே குற்றம் சுமத்தியவர் காண வில்லை என்றால் அதே காவல் துறை எப்படி நியாயமாக விசாரிக்கும் என்ற சந்தேகம் எழுந்தாலும் நம்புவதை தவிர வேறு வழியில்லை.
முதல் அமைச்சரிடம் கேட்டபோது எல்லா குடிமக்களையும் கண்காணிக்க முடியாது என்று கூறிய பதில் அதிர்ச்சியை அளித்தது. இது எடப்பாடி நியாயம்.
உண்மையை வெகு காலம் மறைக்க முடியாது.