சட்டம்

அவதூறு வழக்குகளுக்கு முடிவே கிடையாதா?

Share

எந்த அரசும் அவதூறு வழக்கு போட்டு தண்டனை பெற்று தந்ததாக வரலாறும் இல்லை. எந்த அரசும் அவதூறு வழக்கு போடுவதை நிறுத்தியதாகவும் வரலாறு இல்லை.

அவர்களுக்கு  தண்டனை  பெற்று தருவது நோக்கமல்ல. அப்போதைக்கு வழக்கு போட்டு துன்புறுத்துவது மட்டுமே நோக்கம்.

அந்த வகையை சேர்ந்தது கோவையில் சிம்ப்லிசிடி இணைய தள ஆசிரியர் ஆண்ட்ரூ சாம் ராஜ பாண்டியன் கைது.

நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய நீதிபதி மேலெழுந்தவாரியான பார்வையில் குற்றம் தெரிவதாக திருப்தி அடைந்தபின் தான் அனுப்பி இருப்பார். அதற்கு  போதிய முகாந்திரம் இருக்கிறதா என்பதை மேல் நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்.

கொரொனா தடுப்பு நடவடிக்கைகளில் அவர்கள் கண்ட குறைபாடுகளை எழுதியிருக்கிறார்கள். அவை சரியா தவறா என்பது விசாரணைக்கு உரியது. ஆனால் அதற்காக கைது செய்ய வேண்டுமா? மிரட்ட வேண்டுமா? மிரட்டியதால் எழுதுவதை நிறுத்தி விடப் போகிறார்களா? மேலும் தீவிரமாக எழுதுவார்கள்..

அரசு அதை தவிர்க்க வேண்டாமா?

பத்திரிகையாளர் சங்கம் தொடங்கி திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் எல்லா கட்சி      தலைவர்களும் விடுதலை செய்ய கோரி வேண்டுகோள் விடுத்து விட்டார்கள்.

அதனால்  எல்லாம் அரசு மிரண்டு விடுதலை செய்து விடும் என்று நம்ப இடமில்லை. ஆனால் எல்லாரும் சொல்லிக் கொண்டிருந்தால் மக்கள் விழிப்போடு இருக்கிறார்கள் என்பதை  வரலாறு பதிவு செய்யும் அல்லவா?

This website uses cookies.