இப்படிக் கேட்பதே ஒரு குற்றமாகக் கூட கருதப் படலாம்.
நீதிமன்றத்தின் மாண்பை காக்காத எந்த நாடும் சட்டத்தின் படி ஆளப்படும் நாடாக இருக்க முடியாது.
ஆனால் இன்றைக்கு நீதிமன்றங்கள் தீர்ப்பு தருவதில் காட்டும் தாமதம் எப்படியெல்லாம் அரசியலின் போக்கை மாற்றி அமைக்கிறது என்பதை நினைத்தால் இந்தக் கேள்வியில் குற்றம் இருப்பதாக தெரியவில்லை.
ஜெயலலிதா வழக்கில் வாதங்கள் முடிவடைந்து உடனே தீர்ப்பு வந்திருந்தால் தமிழ்நாட்டின் அரசியல் மாறியிருக்கும். அவர் மறைந்து சசிகலா முதல்வர் ஆக முனைந்தவுடன் வந்தது உடனே தீர்ப்பு. சிறைக்குப் போகிறார் சசிகலா. முன்பே வந்திருந்தால் ஜெயலலிதாவும் சேர்ந்து சிறைக்குப் போயிருப்பார். அரசியல் மாற்றம் அப்போதே வந்திருக்கும். யார் கையில் அதிகாரம் வந்திருக்கும் என்பதெல்லாம் இப்போது சொன்னால் அவை ஊகங்களே.
தினகரனின் அதிமுக 18 பேர் ஆட்சிக்கு எதிராக வாக்கு அளிக்க அளிக்கவில்லை. அவர்கள் தகுதி நீக்கம் செய்யப் படுகிறார்கள். எதிராக வாக்களித்த 11 பேர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். பாமரனுக்கு இந்த கணக்கு புரியவில்லை.
மூன்றாண்டு களுக்குப் பின் உச்ச நீதிமன்றம் சபாநாயகர் தீர்ப்பு சொல்லட்டும் என்று வழக்கை முடித்து வைக்கிறது. சபாநாயகர் இன்னும் ஆறு மாதத்தில் தீர்ப்பு சொல்லி அதற்கு மேன்முறையீடு உச்சநீதி மன்றம் சென்றால் அதற்குள் இந்த ஆட்சியின் ஆயுள் முடிந்து விடும்.
மக்கள் பிரதிநிதிகளின் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைத்தும் விரைந்து முடிவுகள் வர வில்லையே?
அப்பாவு வழக்கில் வாக்குகள் எண்ணி முடித்து அதை வெளியிட உச்சநீதி மன்றம் எடுத்துக் கொள்ளும் நேரம் முடிவதற்குள் ஆட்சியின் ஆயுள் முடிந்து விடும்.
குடிஉரிமை திருத்த சட்டம் மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் தொடர்பாக விசாரிக்கவே உச்சநீதி மன்றம் தயங்கு கிறது. முதலில் போராட்டங்கள் ஓயட்டும் பின்பு விசாரிக்கிறோம் என்கிறார்கள். எப்போது போராட்டம் முடிவது எப்போது நாட்டு மக்களுக்கு சட்ட நிலைமை தெரிவது?
நீதித்துறையின் மாண்பை காக்க விரைந்து செயல்படுவது ஒன்றே வழி? அது நீதித்துறையின் கையில்தான் இருக்கிறது.
This website uses cookies.