‘மீ டூ’ பாலியல் புகார்கள் சட்ட ஆய்வுக்கு உட்பட்டதா இல்லையா?

பெண்கள் பலவீனமானவர்கள்.

எனவே பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவங்கள் கூட இப்போது சொல்லப் படலாம். அப்போது எனக்கு தைரியம் இல்லை. இப்போது கூறுகிறேன். எனவே எல்லாரும் நம்புங்கள் என்று சொல்வதை புரிந்து கொள்ளவே முடியவில்லை.

எம் ஜெ அக்பர் மூத்த பத்திரிகையாளர். இந்தியாவின் முதல் அரசியல் வார இதழை தொடங்கி நடத்தியவர்.

பல பத்திரிகை நிறுவனங்களிடம் அவர் பணி யாற்றி  இருக்கிறார்.

பாஜக வின் ஒரே முஸ்லிம் அமைச்சர். அவர் மீது ப்ரியாரமணி , கசலா வஹாப், சூமா ரகா, அஞ்சு பாரதி உட்பட  பத்துக்கும்  மேற்பட்ட பிரபல பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் கூரியிருகிரார்கள்.

அதில் ப்ரியா ரமணி  மீது கோர்ட்டில் தனி நபர் குற்ற அவதூறு  வழக்கு தொடர்ந்து இருக்கிறார் அக்பர்.

அக்பர் குற்றமற்றவர் என்பது யாருடைய கட்சியும் இல்லை. எல்லாரும் குற்றம் நிரூபிக்கப் படும் வரை நிரபராதிகளே என்ற பொது சட்டம் தான் இங்கு பார்க்க வேண்டும்.

புகார் கொடுக்கட்டும். விசாரணை நடத்தட்டும். தண்டிக்கட்டும்.

அதற்கு முன்னரே புகார் கொடுத்தவுடனேயே அவர் குற்றவாளியாக கருதப் பட்டு தண்டனை வழங்கப்  பட வேண்டும் என்று சிலர் போராடுவது தான்  அநியாயம்.

இதில் காங்கிரஸ் அரசியல் செய்து அக்பர் பதவி விலக வேண்டி போராட்டல்  நடத்தி  இருக்கிறது.

பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த பாலியல்  துன்புறுத்தல் கள் மேல்நாட்டில் விசாரணைக்கு வருவது வழக்கம்.   ஆனால் இங்கு இது புதிது.   வரவேற்க வேண்டிய தொடக்கம்.

ஆனால் விசாரணைக்கு முன்னரே பதவி விலக வேண்டும் என்று  கோருவது என்ன நியாயம்?

அதேபோல் மும்பையில்  நடிகர் அலோக்நாத் தன் மீது கற்பழிப்பு புகார் கூறிய பெண் டைரக்டர் விண்டா நந்தா மீது ஒரு ரூபாய் நட்ட ஈடு கேட்டு மான நஷ்ட வழக்கு தொடுத்திருக்கிறார். அலோக் நாத்தின் மனைவி யும் கூட  மனுதார்.   இந்த புகார் காரணமாக வீட்டை விட்டு  வெளியில் வர முடியாமல் தவிப்பதாக கூறியுள்ளனர்.  மன்னிப்பு கோர வேண்டும் என்பதும் கோரிக்கை.     வழக்கு நடக்கட்டும். உண்மை வெளி வரட்டும்.

தினமும் புது புது பெயர்கள் மீ டூ வில் குவிகின்றன.

டைரக்டர் சுபாஷ் கை மீது நடிகை கேட் சர்மா தன்னை மிரட்டி படுக்கைக்கு அழைத்ததாக போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். டிராக்டர் சுசி கணேசன் மீது பெண் இயக்குனர் லீனா மணிமேகலை பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார். ஏன்  மூத்த நடிகர் அமிதாப் பச்சனும் இந்த புகாருக்கு தப்ப வில்லை.

நடிகை ஷில்பா ஷிண்டே அதெல்லாம் இல்லை. பாலியல் சம்பவங்கள் சம்மதத்துடன் தான் நடக்கின்றன என்கிறார்.

இது எங்கே போய் முடியும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் இது நல்லதற்குத்தான். அடங்கி கிடந்த பெண்கள் வெளியே வர துவங்கி விட்டார்கள் என்ற அளவில் வரவேற்போம். அதே நேரத்தில்  எச்சரிக்கையும் வேண்டும்.

இது  நிச்சயம் ஒரு கட்டத்தில் நீதி மன்றம் சென்றுதான் ஆக வேண்டும். இறுதியில் உச்ச நீதி மன்றம் வரை செல்லும்.  அப்போதுதான் இதற்கு  ஒரு விடை கிடைக்கும்.

ஒன்று மட்டும்  உறுதி. என்னதான் நியாயம் இருந்தாலும் சட்டத்திற்கு புறம்பாக  தண்டனை என்று ஒன்று  இருக்க முடியாது.