தற்போது 24 உயர் நீதிமன்றங்களிலும் 43 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிரதமருக்கு கடிதமெழுதியிருக்கிறார்.
35% அதாவது 377 இடங்கள் காலியாக இருப்பதால் இந்த வழக்குகள் அத்தனையும் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு சொல்லப்பட இன்னும் பத்தாண்டுகளுக்கு மேலாகும் என தெரிகிறது.
காலியாகும் இடங்களுக்கு உடனடியாக நீதிபதிகளை நியமிப்பதில் என்ன சிக்கல்? யார் இந்த தாமதத்திற்கு காரணம்? உச்சநீதிமன்றமும் மத்திய அரசும்தான் காரணம்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 65 என்றாவது மாற்றுங்கள் என்றும் அவர் கேட்டிருக்கிறார்.
உச்ச நீதிமன்றத்திலேயே 58669 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றனவாம். வெறும் 31 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இவற்றை பைசல் செய்ய இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியே ஆகும் என்று இதே நீதி மன்றங்கள் தான் விளக்கி இருக்கிறார்கள். ஆக தெரிந்தே மக்களுக்கு நீதியை மறுக்கிறார்களா?
உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் தங்களுக்குள் அதிகாரப் போட்டி நடத்திக் கொண்டிருந்தால் பாதிக்கப்படப் போவது பொதுமக்கள்தான்.
நீதித்துறை தன்னை யும் சீர்திருத்திக் கொண்டு மத்திய அரசையும் சீர் திருத்த வேண்டும். நடக்கிற காரியமா இது? அரசியல் செய்யும் மத்திய அரசு இதிலும் தன் செல்வாக்கை நிலைநாட்ட முயன்றால் சீர்குலைந்து விடும் ஜனநாயகம். ?!!
எச்சரிக்கை! எச்சரிக்கை !!