கொரொனா பாதித்த மக்களுக்கு தனியார் அரசின் அனுமதியில்லாமால் உதவிகள் வழங்கக் கூடாது என்று அரசு தடை உத்தரவு போட்டதை எதிர்த்து திமுக போட்ட வழக்கில் நாளை உயர் நீதி மன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது.
இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் பொது மக்களுக்கு உதவிகள் வழங்கியதாக திமுகவின் ஒன்றிய செயலாளர் ஒருவர் கைது செய்யப் பட்டு பிணையில் விடுவிக்கப் பட்டிருக்கிறார்.
அரசுக்கு தெரிவித்து கொடுப்பது என்றால் அவர்களின் அனுமதியை பெறுவதில் கட்டுப்பாடுகளை அதிகரித்து தாமதித்து அலைக்கழித்து தடுக்கும் விதத்தில் இருக்கும் .
அப்படி இருக்கக் கூடாது என்பதற்கு நீதிமன்றம் போதிய பாதுகாப்பு வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.
எப்படி இருந்தாலும் அரசு தங்களுக்கு கிடைக்க இருந்த உதவிகளை தடுத்து விட்டது என்ற மக்களின் கோபத்தில் இருந்து அரசு தப்ப முடியாது.
This website uses cookies.