குட்கா பான் மசாலா பொருட்களுக்கு தடை விதித்து கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
அந்த ஆணை ஒவ்வொரு ஆண்டும் நீடிக்கப்படுவது குறித்து நிரந்தர தடை பிறப்பிக்க நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் ஒருவர்.
பேரம் பேசுவதற்கு அல்லாமல் வேறு எதற்கு இந்த ஒவ்வொரு ஆண்டு தடை?
இதற்கெல்லாம் கூட நீதிமன்றம் சென்றுதான் தீர்வு காண வேண்டுமா?
அரசு தானாக செய்யாவிட்டால் கூட பரவாயில்லை. ஒரு வேண்டுகோள் வந்தபிறகு கூட சரி நிரந்தரமாக தடை செய்கிறோம் என்று உத்தரவிட் என்ன தயக்கம்.?
அரசு மக்களின் கோரிக்கைகளை மனிதாபிமானத்துடன் பரிசீலித்து நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் பாதி வழக்குகள் முடிவுக்கு வந்து விடும்.
விஜயபாஸ்கரும் ராஜேந்திரனும் எந்த அளவு இதில் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பது இன்னும் விசாரணை முடியவில்லை.
யார் பதில் சொல்வார்கள்?